Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா?
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!
Beans Kootu Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் பீன்ஸ் உள்ளதா? அப்படியானால் அந்த பீன்ஸை வைத்து சூப்பரான கூட்டு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் பீன்ஸ் கூட்டு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
பொதுவாக பீன்ஸ் பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத காய்கறியாக இருக்கும், ஆனால் இதுபோல பீன்ஸை செய்து கொடுத்தால் இதை யாராலும் வேண்டாமென்று சொல்ல முடியாது. மேலும் இந்த பீன்ஸ் கூட்டு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த கூட்டு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சூப்பரான பீன்ஸ் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீன்ஸ் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பீன்ஸ் - 1/4 கிலோ
- துவரம்பருப்பு - 1/4 கோப்பை
- புளி - மிகச் சிறிய அளவு
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- தேங்காய் - 1/4 கப்
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
- பச்சை மிளகாய் - 1
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- வர மிளகாய் - 4
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- பருப்பை நன்றாக களவுவி குக்கரில் சேர்த்து அதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 3 விசில் வரும் வரை வேகவிடவும். அதை நன்றாக மசித்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- பீன்ஸுடன் சிறிதளவு உப்பு, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
- குக்கரில் உள்ள அழுத்தம் தணிந்ததும், அதைத் திறந்து தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கப் கொதிக்கும் நீரில் புளியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். சாற்றைப் பிரித்தெடுத்து, தனியாக வைக்கவும்.
- தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்றாக அரைத்து விழுதாக்கித் தயாராக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் சீரகம், வர மிளகாய், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகும், சீரகம் பொரிந்ததும், கடாயில் புளிக்கரைசல், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- புளிக்கரைசல் கொதிக்க தொடங்கியதும் வேக வைத்த பீன்ஸைச் சேர்த்து, புளியின் பச்சை வாசனை நீங்கும் வரை அல்லது மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பின்னர் வேகவைத்த பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- பீன்ஸ் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த பீன்ஸ் கூட்டு சாதம், தோசை மற்றும் சப்பாத்தி ஆகிய இரண்டிற்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications