பாசந்தி ரெசிபி : பாரம்பரிய பாசந்தி செய்முறை

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

பாசுந்தி சுவை மிகுந்த நமது நாட்டின் புகழ்பெற்ற இனிப்பு வகை ஆகும். இது கர்நாடக, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் எல்லா சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது இதை செய்து மகிழ்வர். பாசுந்தி என்பது பாலை பாதியாக சுண்ட காய்ச்சி அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய், உலர்ந்த பழங்கள் போட்டு செய்யப்படும் இனிப்பு வகை யாகும்.

இது பொதுவாக எல்லா பண்டிகையின் போது செய்யப்பட்டாலும் குஜராத் கல்யாண நிகழ்ச்சிகளில் இது மிகவும் முக்கியமான இனிப்பு வகையாக உள்ளது.

இந்த ரெசிபியை மிகவும் வேகமாகவும் எளிதாகவும் குறைந்த சமையல் நேரத்திலேயே செய்து விடலாம். எனவே இதை எப்பொழுதும் பார்டி சமயத்திலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மான ஸ்வீட் என்பதால் அவர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து கொடுக்கலாம். இதை உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் போதும் செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டு மகிழ்வர். இந்த இனிப்பு கண்டிப்பாக உங்கள் இனிப்பு சுவை தாகத்திற்கு விருந்தாகும்.

சரி வாங்க இதை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை செய்முறை விளக்க படத்துடனும் மற்றும் வீடியோ மூலமும் காணலாம்

பாசுந்தி ரெசிபி வீடியோ

பாசந்தி ரெசிபி
பாசுந்தி ரெசிபி /மகாராஷ்டிர பாசுந்தி ரெசிபி செய்வது எப்படி /விரைவான பாசுந்தி ரெசிபி /கலாச்சார உணவான பாசுந்தி ரெசிபி
Prep Time
5 Mins
Cook Time
5M
Total Time
25 Mins

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 2

Ingredients
 • க்ரீம் மில்க் - 1/2 லிட்டர்

  சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

  நறுக்கிய முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

  ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
 • 1. நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும்.

  2. பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

  3. பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்

  4. இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும்

  5. பிறகு நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்

  6. நன்றாக கலக்கவும்

  7. அடுப்பை அணைப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்னாடி ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.

Instructions
 • 1.பால் பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
 • 2.அடுப்பை மிதமான தீயில் வைத்து கொண்டால் பால் கருகுவதை தடுக்கலாம்
 • 3.பாலின் அளவு பாதியாக குறைந்த பிறகு சுகர் சேர்க்கவும். இல்லையென்றால் அது கலவையை கெட்டியாக மாற விடாது
 • 4.குங்குமப் பூ சேர்த்து கொண்டால் அழகான சுவையான கலர் கிடைக்கும்.
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1கப்
 • கலோரிகள் - 398 கலோரிகள்
 • கொழுப்பு - 17 கிராம்
 • புரோட்டீன் - 14 கிராம்
 • கார்போஹைட்ரேட் - 48 கிராம்
 • சுகர் - 46 கிராம்
 • இரும்புச் சத்து - 1%
 • விட்டமின் ஏ - 9%

படிப்படியான செய்முறை விளக்கம் :பாசுந்தி செய்வது எப்படி

1. நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும்.

பாசந்தி ரெசிபி

2. பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

பாசந்தி ரெசிபி
பாசந்தி ரெசிபி

3. பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்

பாசந்தி ரெசிபி

4. இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும்

பாசந்தி ரெசிபி
பாசந்தி ரெசிபி

5. பிறகு நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்

பாசந்தி ரெசிபி
பாசந்தி ரெசிபி

6. நன்றாக கலக்கவும்

பாசந்தி ரெசிபி

7. அடுப்பை அணைப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்னாடி ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.

பாசந்தி ரெசிபி
பாசந்தி ரெசிபி
பாசந்தி ரெசிபி
பாசந்தி ரெசிபி
[ 4.5 of 5 - 95 Users]