Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்..
Chicken Pickle Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ஊறுகாய் பிரியர்களா? எப்போது எந்த உணவை உட்கொண்டாலும், அத்துடன் ஊறுகாயையும் சைடு டிஷ்ஷாக எடுத்துக் கொள்வார்களா? இதனால் உங்கள் வீட்டில் எப்போதுமே ஊறுகாய் ஸ்டாக் இருக்குமா? இதுவரை நீங்கள் எலுமிச்சை, மாங்காய், நார்த்தங்காய், தக்காளி, பூண்டு போன்ற ஊறுகாய்களை சுவைத்திருப்பீர்கள்.

ஆனால் சிக்கன் ஊறுகாயை சுவைத்துள்ளீர்களா? முக்கியமாக இந்த ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? அதுவும் சிம்பிளான பொருட்களைக் கொண்டே செய்யலாம். இந்த சிக்கன் ஊறுகாயை ஒருமுறை செய்தால், அறை வெப்பநிலையில் அதாவது வெளியில் 3-4 நாட்கள் வரையும், ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால் 2-3 வாரங்கள் வரையும் வைத்து சாப்பிடலாம்.
இந்த சிக்கன் ஊறுகாய் குறித்து ரேகா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு சிக்கன் ஊறுகாயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ஊறுகாய் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - 2
வறுத்து பொடி செய்வதற்கு..
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3-4
* ஏலக்காய் - 3
* அன்னாசிப்பூ - 1
* பட்டை - 1 சிறிய துண்டு
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பொடியாக நறுக்கிய சிக்கனை கழுவி ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு
கலந்து, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, நன்கு
மொறுமொறுவென்று ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் 2 டேபிள்
ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் ப்ரை செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் கடுகு,
வெந்தயம், சீரகம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பட்டை, மல்லி
விதை ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர
வைத்து, நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பொடியை மற்றொரு அடுப்பில் உள்ள சிக்கனுடன் சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 2 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து நன்கு கிளறி
இறக்கி குளிர வைத்தால், சுவையான சிக்கன் ஊறுகாய் தயார்.
* சிக்கன் ஊறுகாய் நன்கு குளிர்ந்த பின், ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு
வைத்துக் கொண்டால், 3-4 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதுவே
ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால் 2-3 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications