Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க..
Andhra Special Guntur Chicken Masala Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு புதுவிதமான ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு காரசாரமான உணவுகள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலாவை செய்து சாப்பிடுங்கள்.

இந்த குண்டூர் சிக்கன் மசாலா செய்து, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். சன்டே நாளில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், ரசம் வைத்து இந்த குண்டூர் சிக்கன் மசாலாவை செய்யலாம்.
இந்த ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா ரெசிபி குறித்து ஹேமா சுப்ரமணியன் என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
மசாலா பேஸ்ட்டிற்கு..
* அரைத்த மசாலா பவுடர் - 1 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்
* தண்ணீர் - சிறிது
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மசாலா பேஸ்ட்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* ஊற வைத்த சிக்கன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த மசாலா பவுடர்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'வறுத்து
அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களான மல்லி, மிளகு, சீரகம், வரமிளகாய்
ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த பொடியில் இருந்து 2 டீஸ்பூன் பொடியை எடுத்து தனியாக ஒரு
கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பொடியுடன்
இஞ்சி, பூண்டு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட்
போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்து, அத்துடன் மஞ்சள்
தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா
பேஸ்ட்டை சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய 2 பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட்டு,
தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்கு பிரட்டி,
கறிவேப்பிலை தூவி கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, அத்துடன் 1/2 டீஸ்பூன்
உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வைக்க
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், சிக்கன் நன்கு வெந்து
இருக்கும். பின் அடுப்பை அணைத்துவிட்டு அதை இறக்கி கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
