Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
3 வாழைப்பழமும் 1 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்..
Banana Poli Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் திடீரென்று சாப்பிட ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பழத்தையும், கோதுமை மாவு கொண்டும் ஒரு அற்புதமான மற்றும் சுவையான போளி செய்யுங்கள்.
இந்த வாழைப்பழ போளியானது மிகவும் ருசியாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். ஒருமுறை இந்த போளியை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பழ போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 1/2 கப்
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு..
* முந்திரி - 10
* பாதாம் - 10
* ஏலக்காய் - 3
* பெரிய வாழைப்பழம் - 3
உள்ளே வைப்பதற்கு...
* நெய் - 2 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* ரவை - 1/4 கப்
* நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அதில் சிறிது
உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கைகளால் நன்கு
பிரட்டி விட வேண்டும்.
* பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு பிசைந்து, மூடி வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 10 முந்திரி, 10 பாதாம் மற்றும் 3 ஏலக்காய்
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு பொடித்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதே ஜாரில் 3
வாழைப்பழத்தை துண்டுகளாக்கி சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், ரவையை சேர்த்து நன்கு ப்ரை செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு,
அரைத்த முந்திரி பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* கலவையானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் 1 டீஸ்பூன் நெய்
சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, கலவை நன்கு திரண்டு வந்ததும், அடுப்பை
அணைத்துவிட்டு வெதுவெதுப்பான நிலைக்கு குளிர வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு குளிர்ந்த பின், அதை சிறு சிறு
உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சமாக எடுத்து உருட்டி, லேசாக
தட்டையாக தேய்த்துக் கொண்டு, நடுவே வாழைப்பழ உருண்டையை வைத்து, மாவால்
மூடி விட வேண்டும்.
* பின்பு மேலே கோதுமை மாவைத் தூவி சற்று சப்பாத்தி போன்று தேய்த்துக்
கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து
வைத்துள்ளதை போட்டு, முன்னும் பின்னும் நெய் தடவி, வேக வைத்து
எடுத்தால், சுவையான வாழைப்பழ போளி தயார்.



Click it and Unblock the Notifications
