For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி

Posted By: suganthi
|
பாதாம் பூரி ரெசிபி | பாதாம் பூரி செய்வது எப்படி | பண்டிகை ஸ்பெஷல் | Boldsky

உங்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் இனிப்பு கொண்டாட்டமும் இடம் பெறும். தித்திக்கும் இனிப்பு சுவை நாக்கில் ததும்ப சுவை அரும்புகள் மலர, எல்லாருக்கும் விருப்பமான ஸ்வீட் தான் இந்த ரெசிபி.

அப்படியே மொறு மொறுப்பான பூரியுடன் அதன் மேல் அப்படியே சர்க்கரை பாகுவில் நனைத்து சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான். குழந்தைகளுக்கு விருப்பமான டிஸ்ஸூம் இது தான்.

இந்த பாதாம் பூரி இந்தியாவின் பல இடங்களில் பண்டிகைகளின் போது விருப்பமாக செய்யப்படுகிறது. இதில் விருப்பமான விஷயம் என்னவென்றால் இந்த பூரியை செய்ய பாதாம் தேவையில்லை என்பது தான். நாங்கள் பாதாம் இல்லாத பூரியை செய்து உங்கள் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்க போகிறோம்.

Badam Puri Recipe
பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி/பாதாம் பூரி செய்முறை விளக்கம் /பாதாம் பூரி வீடியோ ரெசிபி
பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி/பாதாம் பூரி செய்முறை விளக்கம் /பாதாம் பூரி வீடியோ ரெசிபி
Prep Time
15 Mins
Cook Time
30M
Total Time
45 Mins

Recipe By: காவ்யா

Recipe Type: ஸ்வீட்

Serves: 5-6

Ingredients
  • மைதா மாவு - 1 கப்

    சர்க்கரை - 3/4 கப்

    உருக்கிய நெய் - 1/4 கப்

    உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 1 கப்

    உப்பு - சுவைக்கேற்ப

    ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    கிராம்பு - 8-10

Red Rice Kanda Poha
How to Prepare
  • ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள்

    அதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்

    அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்

    ஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும்

    நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.

    அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்

    இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும்

    பிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி)

    இப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்

    அந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்

    துருவிய தேங்காயை அதில் மேல் தூவி அப்படியே சுவையுடன் அழகாக பரிமாறி சாப்பிடலாம்.

Instructions
  • சர்க்கரை பாகின் பதத்தை சரியாக பார்த்து கொள்ள வேண்டும்
  • சர்க்கரை பாகு ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சரியான பதத்திற்கு கொண்டு வந்து கொள்ளுங்கள்
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 பூரி
  • கலோரிகள் - 140 கலோரிகள்

படத்துடன் செய்முறை விளக்கம் :பாதாம் பூரி செய்வது எப்படி

ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள்

அதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்

அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்

ஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும்

நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.

அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்

இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும்

பிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி)

இப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்

அந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்

துருவிய தேங்காயை அதில் மேல் தூவி அப்படியே சுவையுடன் அழகாக பரிமாறி சாப்பிடலாம்.

[ 5 of 5 - 66 Users]
Read more about: recipe
English summary

Badam Puri Recipe | How To Make Badam Poori | Festival Special Sweet Snacks Recipe

Badam Puri is a traditional Karnataka-style sweet dish that can also be served as a munch-on festival-time snack. We love this sweet snacks recipe for its unique texture and the delicate taste that it lends us. The oozing syrup from the crispy puris has us hooked and we don't mind our hands being sticky for it.
Story first published: Friday, March 16, 2018, 15:49 [IST]
Desktop Bottom Promotion