Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
அவல் வடை
உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான அவல் வடை செய்து கொடுங்கள். இந்த அவல் வடை செய்வது மிகவும் சுலபம். இந்த வடை செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? நல்ல மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான அவல் வடை செய்து கொடுங்கள். இந்த அவல் வடை செய்வது மிகவும் சுலபம். இந்த வடை செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.

உங்களுக்கு அவல் வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அவலை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு, தயிர், வெங்காயம், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* ஒருவேளை கலவை மிகவும் ட்ரையாக இருந்தால், அதில் சிறிது நீர் தெளித்து உருண்டைகளாக வரும் பதத்தில் பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, வடை போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அவல் வடை தயார்.
குறிப்பு:
* வடைகளை எண்ணெயில் பொரிக்கும் போது, மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கருகிவிடும்.
* வடைக்கான மாவை தயாரிக்கும் போது அதிக நீரை சேர்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் வடை செய்ய முடியாது.
* அதேப் போல் உருண்டை பிடித்து தட்டும் போது மிகவும் இறுக்கமாக பிடிக்காமல் லேசாக பிடியுங்கள். இல்லாவிட்டால் பொரிக்கும் போது உதிர்ந்துவிடும்.
* தடிமனான அவல் பயன்படுத்துவதக இருந்தால், அதை நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் பயன்படுத்துங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications









