Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
வீட்டுல இட்லி மாவு இல்லையா? அப்ப 1 கப் அவல் வெச்சு.. காலையில் இப்படி இட்லி செய்யுங்க.. செமயா இருக்கும்...
Aval Idly Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் பெரும்பாலும் செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் மாவு தீர்ந்துவிட்டதா? அப்படியானால் கவலைப்படாதீர்கள். வீட்டில் 1 கப் அவல் இருந்தால் போதும், அருமையான சுவையில் பஞ்சு போன்று மிருதுவான இட்லியை செய்யலாம்.
இந்த இட்லி செய்வதற்கு மிகவும் சுவையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். முக்கியமாக இந்த இட்லிக்கு அனைத்து விதமான சட்னியும் பொருத்தமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் வித்தியாசமான டிபனை கேட்டால், இந்த இட்லியை செய்து கொடுக்கலாம்.

உங்களுக்கு அவல் இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* லேசாக புளித்த தயிர் - 1 கப்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் அவலை எடுத்து, அதில் நீரை ஊற்றி ஒரு
முறை அலச வேண்டும்.
* பின் அதில் 1 கப் புளித்த தயிரை ஊற்றி, சிறிது நீரை சேர்த்து நன்கு
கலந்து மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து கிளறி, பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய கேரட், நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் ரவையை சேர்த்து, ரவை லேசாக நிறம் மாறும் வரை
வறுத்து இறக்க வேண்டும்.
* பிறகு வறுத்ததை அவலுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து, மூடி
வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு
மற்றும் விருப்பமிருந்தால் ஆப்ப சோடாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி
நன்கு கலந்து விட வேண்டும்.
* பின்னர் இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அந்த குழிகளில்
கலந்து வைத்துள்ள அவல் மாவை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, அதை இட்லி
பாத்திரத்தினுள் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
அவல் இட்லி தயார்.



Click it and Unblock the Notifications
