Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
அரிசி மாவு சப்பாத்தியும், தக்காளி தொக்கும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
Arisi Maavu Chapati With Tomato Thokku Recipe In Tamil: காலையில் எப்பவும் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? சப்பாத்தி செய்யலாம் என்றாலும், அதுவும் போரடிக்கிறதா? அப்படியானால் வீட்டில் அரிசி மாவு இருந்தால், அதை கொண்டு சப்பாத்தி செய்யுங்கள். இந்த அரிசி மாவு சப்பாத்தி மென்மையாக இருக்கும். அதோடு இந்த சப்பாத்திக்கு தக்காளி தொக்கை சைடு டிஷ்ஷாக செய்தால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த அரிசி மாவு சப்பாத்தி பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் எளிதானது என்பதால், வேலைக்கு செல்பவர்களும் இந்த ரெசிபியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது இப்படி வித்தியாசமான ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்கலாம்.
இந்த அரிசி மாவு சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு ரெசிபி குறித்து திண்டுக்கல் ஃபுட் கோர்ட் என்னும் யூடியூப் பக்கத்தி பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு அரிசி மாவு சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி மாவு சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு சப்பாத்திக்கு...
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* அரிசி /இடியாப்ப மாவு - 1 கப்
தக்காளி தொக்குவிற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 5-7
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* தக்காளி - 5 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் நீரை
ஊற்றி, அத்துடன் உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி, நீரை சூடேற்ற
வேண்டும்.
* நீர் நன்கு சூடாகி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசி மாவை
சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து 10 நிமிடம் அப்படியே
விட வேண்டும்.
* பின்பு மாவை கைகளால் நன்கு மென்மையாகும் வரை பிசைந்து விட
வேண்டும்.
* பிறகு மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று
தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, முன்னும், பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான அரிசி மாவு சப்பாத்தி தயார்.
* அடுத்து சைடு டிஷ்ஷாக தக்காளி தொக்கு செய்யலாம். அதற்கு ஒரு வாணலியை
அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வெந்தயம்,
பூண்டு, காஷ்மீரி வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, முதலில்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி, புளி, மிளகாய் தூள் மற்றும்
உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 10
நிமிடம் பச்சை வாசனை போக வேக வைத்து இறக்கினால், சுவையான தக்காளி
தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications
