வீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க...

Posted By: suganthi rajalingam
Subscribe to Boldsky

இப்பொழுதெல்லாம் நிறைய டிஷ்க்கு ஜாம் தொட்டு சாப்பிடுவதைத் தான் எல்லாரும் விரும்புகிறோம். அதுவும் ஜாம் என்றால் போதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் ரொம்பவும் பிடித்தமான ஒன்று . கடைகளில் விற்கப்படும் ஜாமில் ஏராளமான செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டுகள் போன்ற உடலுக்கு கெடுதலான விஷயங்களை சேர்க்கின்றனர். எனவே இதற்கு பதிலாக வீட்டிலேயே எளிதான முறையில் ஆப்பிள் ஜாம் தயாரித்து கொடுக்கலாம். ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொண்டால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும் உங்கள் காலை உணவான பிரட், சப்பாத்தி போன்றவற்றிற்கு சிறந்த சைடிஸாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆப்பிள் ஜாம் என்பதால் இதில் உள்ள நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ளோனாய்டுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவியாக இருக்கும். எனவே தான் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த ரெசிபி ஆகும்.

சரி வாங்க இந்த சுவை மிகுந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Apple jam recipe
ஆப்பிள் ஜாம் ரெசிபி /ஆர்கானிக் ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி /ஹோம்மேடு ஆப்பிள் ஜாம் ரெசிபி/ஆப்பிள் ஜாம் ரெசிபி செய்முறை விளக்கம்/ஆப்பிள் ஜாம் வீடியோ ரெசிபி
ஆப்பிள் ஜாம் ரெசிபி /ஆர்கானிக் ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி /ஹோம்மேடு ஆப்பிள் ஜாம் ரெசிபி/ஆப்பிள் ஜாம் ரெசிபி செய்முறை விளக்கம்/ஆப்பிள் ஜாம் வீடியோ ரெசிபி
Prep Time
10 Mins
Cook Time
20M
Total Time
30 Mins

Recipe By: காவ்யா

Recipe Type: காலை உணவு

Serves: 5-2

Ingredients
 • ஆப்பிள் - 2

  சர்க்கரை - 1கப்

  லெமன் - 1/2 பழம்

  தண்ணீர் - 1/2 கப்

Red Rice Kanda Poha
How to Prepare
 • ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  அடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்

  நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்

  5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்

  பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்

  பிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.

  ஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

  நன்றாக கிளறி ஆற விடவும்

  ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

Instructions
 • லெமன் ஜூஸ் சேர்ப்பது ஆப்பிள் ஜாம் கெட்டு போகாமல் இருப்பதற்கு மட்டுமே எனவே சரியான அளவில் பயன்படுத்தி கொள்ளுங்கள்
 • 1 பெளல் ஆப்பிள் துண்டுகளுக்கு 1 கப் சர்க்கரை என்ற விதத்தில் சேர்த்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதற்கேற்ப சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள்
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1 டேபிள் ஸ்பூன் (15 கிராம்)
 • கலோரிகள் - 32
 • கார்போஹைட்ரேட் - 8.1 கிராம்.
 • நார்ச்சத்து - 0.2 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் :ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி

ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

Apple jam recipe
Apple jam recipe
Apple jam recipe

அடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்

Apple jam recipe

நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்

Apple jam recipe
Apple jam recipe

5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்

Apple jam recipe
Apple jam recipe

பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்

Apple jam recipe
Apple jam recipe

பிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.

Apple jam recipe
Apple jam recipe
Apple jam recipe

ஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

Apple jam recipe
Apple jam recipe

நன்றாக கிளறி ஆற விடவும்

Apple jam recipe
Apple jam recipe

ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

Apple jam recipe
[ 5 of 5 - 89 Users]
Read more about: recipes