Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1 கப் வேர்க்கடலை வெச்சு.. இப்படி ஆந்திரா ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Andhra Style Peanut Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வேர்க்கடலை சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று சட்னி செய்யாமல், ஆந்திரா ஸ்டைலில் வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள்.
இப்படி சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். மேலும் இந்த ஸ்டைல் சட்னியை ஒருமுறை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் இந்த சட்னியின் சுவை ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறு நெல்லிக்காய் அளவு
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வேர்க்கடலை - 1 கப்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், புளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து, 30 நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, 1 கப் வேர்க்கடலை
சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சிறிது சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1
வரமிளகாய் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
