Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Andhra Style Kothavarangai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? ஆனால் யாரும் இதை சாப்பிடமாட்டார்களா? கொத்தவரங்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இந்த கொத்தவரங்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பலரும் இந்த கொத்தவரங்காயை பொரியல் செய்து தான் சாப்பிடுவார்கள்.

ஆனால் இதைக் கொண்டு கிரேவி செய்தால், அனைத்து வகையான டிபனுடனும், சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். அதுவும் ஆந்திரா ஸ்டைலில் கொத்தவரங்காய் கிரேவியை செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியை காலையில் எழுந்ததும் ஒரு முறை செய்தால், நாள் முழுவதும் சமைக்க வேண்டிய அவசியமே இருக்காது. மூன்று வேளையும் வைத்து சாப்பிடலாம்.
இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி குறித்து அக்ஷயா கிச்சன் ரெசிபிஸ் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தவரங்காய் - 1/4 கிலோ
* அரைத்த மசாலா
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த வேர்க்கடலை,
மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை
ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கொத்தவரங்காயை சேர்த்து பச்சை வாசனை போக 3-4
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி, உப்பு
சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2-3
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications