Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி
உங்கள் வீட்டில் ஆந்திரா ரெசிபிக்களை முயற்சிக்க நினைக்கிறீர்களா? ஆந்திரா ரெசிபிக்களின் சிறப்பே காரம் தான். உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி இருந்தால், அதைக் கொண்டு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்யலாம்.
உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் பிடிக்குமா? உங்கள் வீட்டில் ஆந்திரா ரெசிபிக்களை முயற்சிக்க நினைக்கிறீர்களா? ஆந்திரா ரெசிபிக்களின் சிறப்பே காரம் தான். உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி இருந்தால், அந்த சிக்கனைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடன் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்யலாம். இந்த கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரிக்கும் ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 600 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 /2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 1
* கசகசா - 2 டீஸ்பூன்
* கொப்பரைத் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
பிற பொருட்கள்:
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி, அதில் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களான, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் 'அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களான இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, கொப்பரை தேங்காய் சேர்த்து, சுடுநீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை சேர்த்து ஒரு 4-6 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு சிக்கன் மூழ்கும் வரை நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கி, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.
குறிப்பு:
* வேண்டுமானால் இதை குக்கரிலும் செய்யலாம். ஆனால் குக்கரில் செய்யும் போது, சிக்கன் வேக 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications