Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மாங்காய் தால்
கோடையில் கிடைக்கும் மாங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களைத் தயாரித்து சுவைக்கலாம். அதுவும் மாங்காய் கொண்டு அட்டகாசமான சுவையில் ஆந்திரா ரெசிபியை செய்யலாம். அது தான் பச்சை மாங்காய் தால்.
கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் என்பதால், எங்கு பார்த்தாலும் மாங்காய் விலைக் குறைவில் கிடைப்பதைக் காண்போம். அப்படி கிடைக்கும் மாங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களைத் தயாரித்து சுவைக்கலாம். அதுவும் மாங்காய் கொண்டு அட்டகாசமான சுவையில் ஆந்திரா ரெசிபியை செய்யலாம். அது தான் பச்சை மாங்காய் தால். இந்த தால் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா பச்சை மாங்காய் தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா பச்சை மாங்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தால் செய்வதற்கு...
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* துவரம் பருப்பு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மாங்காய் சமைப்பதற்கு...
* மாங்காய் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கவும்)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பற்கள்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் ஒரு குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் 2 கப் நீர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு மத்து அல்லது கரண்டியால் பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மாங்காயை சமைப்பதற்கு, குக்கரில் மாங்காய் துண்டுகளைப் போட்டு, அத்துடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் 1/2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டுகளை தட்டிப் போட்டு, லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள மாங்காய் மற்றும் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆந்திரா பச்சை மாங்காய் தால் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications