Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
காரசாரமான.. ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Andhra Style Mutton Kuzhambu Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? எப்போதும் மட்டனை ஒரே சுவையில் சமைத்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் மட்டன் செய்ய நினைக்கிறர்களா?
அப்படியானால் ஆந்திரா மட்டன் குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது தவிர இந்த குழம்பு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
வறுத்து பேஸ்ட் செய்வதற்கு...
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* கருப்பு ஏலக்காய் - 1
* பச்சை ஏலக்காய் - 2
* கிராம்பு - 4-5
* ஜாதிபத்திரி - 1
* பட்டை - 1 இன்ச்
* வரமிளகாய் - 2
* முந்திரி - 12
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய மட்டனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும்
தயிர் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, கருப்பு
ஏலக்காய், பச்சை ஏலக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு, பட்டை, வரமிளகாய்,
முந்திரி, பூண்டு, இஞ்சி, துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில்
வைத்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், பிரியாணி இலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, மூடி
வைத்து 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து மட்டனைக் கிளறி, அரைத்து வைத்துள்ள
விழுதையும் சேர்த்து நன்கு 4-5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை
சேர்த்து, அத்துடன் மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து
கிளறி, மூடி வைத்து 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி, குழம்பிற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட்டு, மிதமான தீயில் வைத்து, மட்டனை
மூடி நன்கு வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத்
திறந்து கிளறி விட வேண்டும்.
* மட்டன் நன்கு வெந்ததும் மூடியைத் திறந்து, அடுப்பை அணைத்துவிட்டு,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மற்றும் காரசாரமான
ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications