ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் குழம்பு.. 10 நிமிடத்தில் சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Andhra Manga Paruppu Kuzhambu: கோடைக்காலம் என்பதால் மாங்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. எங்கும் மாங்காயும், மாம்பழம் நிறைந்திருப்பதைக் காணலாம். நிறைய பேர் மாங்காயை வாங்கி வைத்து, ஊறுகாய் செய்து வைத்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் மாங்காயைக் கொண்டு பல வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சாப்பிட நினைப்பார்கள்.

நீங்களும் அப்படி மாங்காயைக் கொண்டு வித்தியாசமான ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் குழம்பை செய்து சாப்பிடுங்கள். இந்த மாங்காய் குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். எனவே இந்த மாங்காய் சீசனில் ஒருமுறையாவது இந்த குழம்பை செய்து சாப்பிடுங்கள்.

Andhra Manga Paruppu Kuzhambu How To Make a Andhra Mamidikaya Pappu Recipe

உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* மாங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (தட்டியது)
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை எடுத்து, நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி, அத்துடன் துண்டுகளாக்கப்பட்ட மாங்காய், வெங்காயம், தக்காளியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், மிளகாய் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் லேசாக மசித்து விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மிளகாய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து கிளறி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் பருப்பு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 17, 2025, 14:51 [IST]
Desktop Bottom Promotion