Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை
சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை
Andhra Chicken Kola Urundai: இன்று விடுமுறை என்பதால் பலரும் வீடுகளில் சிக்கன், மட்டன் என்று வாங்கி, அதை பலவிதமாக சமைத்து சாப்பிடுவோம். நீங்கள் இந்த வாரம் ஒரு வித்தியாசமான ரெசிபியை வீட்டில் முயற்சிக்க நினைத்தால், ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை செய்யுங்கள்.
இந்த சிக்கன் கோலா உருண்டையை மதிய வேளையில் சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். உங்களுக்கு ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை ரெசிபியை எப்படி வீட்டில் செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* வரமிளகாய் - 3
* பூண்டு - 15 பல்
* இஞ்சி - 3 இன்ச்
* கொத்தமல்லி - சிறு கட்டு (பொடியாக நறுக்கியது)
* மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 இன்ச்
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 5-6
* முந்திரி - 20
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மல்லி விதை, ஏலக்காய், கிராம்பு,
பட்டை, வரமிளகாய் மற்றும் முந்திரி சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வரமிளகாய்
மற்றும் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், கொத்தமல்லி, சிக்கன் மற்றும் உப்பு
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த கலவையில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரட்டிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், உருண்டைகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து
பொரித்து எடுத்தால், சுவையான ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications