Just In
- 2 hrs ago
மைதா போண்டா
- 3 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 3 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
- 4 hrs ago
பொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப உஷாரா இருங்க இவங்ககிட்ட...!
Don't Miss
- Movies
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- News
டெல்லி டிராக்டர் பேரணி, தமிழக விவசாயிகள் பேரணி, ஒன்று கூடல்களுக்கு திமுக முழு ஆதரவு: ஸ்டாலின்
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆலு பிந்தி ரெசிபி
எப்போதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரி குருமா செய்து போர் அடிக்குதா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் வட இந்தியாவில் சப்பாத்திக்கு செய்யும் ஆலு பிந்தி சப்ஜியை செய்து சுவையுங்கள். ஆலு பிந்தி என்பது வேறொன்றும் இல்லை, உருளைக்கிழங்கு மற்றும் வெண்டைக்காய் கொண்டு தயாரிக்கப்படும் சப்ஜி ஆகும்.
உங்களுக்கு ஆலு பிந்தி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், கீழே அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ருசியான... பன்னீர் புர்ஜி கிரேவி
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த உருளைக்கிழங்கு (ஆலு) - 1
* வெண்டைக்காய் (பிந்தி) - 10
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 2 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நீரில் நன்கு கழுவி, ஒரு துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு, குறைவான தீயில் சுருங்கும் வரை வதக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் உருளைக்கிழங்கை போட்டு நீர் ஊற்றி 3-4 விசில் விட்டு இறக்கி, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* பின் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை வெண்டைக்காய் வதக்கிய வாணலிலேயே போட்டு சிறிது நேரம் வதக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* பின்பு அதே வாணலியில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகவும் வரை வதக்கவும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக நன்கு 2 நிமிடம் வதக்கி, பின் வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டி, 3-5 நிமிடம் குறைவான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
* மசாலா வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்குடன் நன்கு ஒன்று சேர்ந்தும் இறுதியில் மாங்காய் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான ஆலு பிந்தி தயார்..!
குறிப்பு:
உங்களிடம் மாங்காய் தூள் இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள்.