Latest Updates
-
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
Agar Agar Milk Sarbath Recipe : அகர் அகர் பால் சர்பத்
உடல் சூட்டைக் குறைக்கும் ஓர் சுவையான பானம் தான் அகர் அகர் பால் சர்பத். இந்த பால் சர்பத் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் இருக்கும்.
மண்டையைப் பிளக்கும் வகையில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலின் போது பலருக்கும் அதிகப்படியான தாகம் எடுக்கும் மற்றும் உடல் அதிக வெப்பமாகும். இப்படி உடல் வெப்பம் அதிகரிக்கும் போது, உடல் சூட்டைக் குறைக்க ஒருசில பானங்களைக் குடிப்பதே சிறந்த வழி. அந்த வகையில் உடல் சூட்டைக் குறைக்கும் ஓர் சுவையான பானம் தான் அகர் அகர் பால் சர்பத். இந்த பால் சர்பத் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு அகர் அகர் பால் சர்பத் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அகர் அகர் பால் சர்பத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அகர் அகர் - 5 கிராம்
* தண்ணீர் - 1 கப்
* குளிர்ந்த பால் - 500 மிலி
* சர்பத் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அகர் அகரை குளிர்ந்த நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்த அகர் அகரை நீருடன் சேர்த்து கரண்டியால் கிளறி விட்டு உருக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி ஒரு பௌலில் ஊற்றி அறை வெப்பநிலைக்கு வந்ததும், அதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜெல்லி போன்று ஆனதும் வெளியே எடுத்து, அதை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு டம்ளரில் உதிர்த்த ஜெல்லியைப் போட்டு, அதில் தேவையான அளவு சர்பத்தை ஊற்றி, குளிர்ந்த பாலை சேர்த்து நன்கு கிளறினால், சுவையான அகர் அகர் பால் சர்பத் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications