Latest Updates
-
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்..
Thanjavur Special Adai Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் காலை டிபனை சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் தஞ்சாவூர் ஸ்பெஷல் அடையை செய்து சாப்பிடுங்கள். இந்த அடைக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. அந்த அளவில் இந்த அடை ருசியாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த அடையை செய்தால், வாரம் ஒருமுறை இந்த அடையை செய்யுமாறு வீட்டில் உள்ளோர் கேட்பார்கள். இந்த அடை புரோட்டீன் அதிகம் நிறைந்தது என்பதால், சத்தானதும் கூட.

உங்களுக்கு இந்த தஞ்சாவூர் ஸ்பெஷல் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* இட்லி அரிசி - 1 கப்
* பச்சரிசி - 1 கப்
* கருப்பு உளுந்து - 1 கப்
* துவரம் பருப்பு - 1 கப்
* கடலைப் பருப்பு - 1 கப்
* வரமிளகாய் - 6-7
அரைப்பதற்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* ஊற வைத்த பொருட்கள்
* பூண்டு - 4-5 பல்
* தண்ணீர் - தேவையான அளவு
பிற பொருட்கள்..
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* சுரைக்காய் - 1 கப் (துருவியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, கருப்பு
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை
எடுத்துக் கொண்டு நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, அதில்
6-7 வரமிளகாயை சேர்த்து 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய், சோம்பு, சீரகம் சேர்த்து
முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்த அரிசி பருப்பு, 4-5 பல் பூண்டு சேர்த்து, நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, நீரை
அதிகமாக ஊற்றாமல் சற்று கெட்டியாக இருக்குமாறு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, துருவிய
சுரைக்காய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய
தேங்காய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி,
லேசாக பரப்பி விட்டு, மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும்
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை தயார். இதேப்
போல் அனைத்து மாவையும் அடையாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
