Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
மொறுமொறுப்பான அடை தோசையும்.. இஞ்சி துவையலும்.. எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Adai Dosa And Ginger Thuvaiyal Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரியான காலை டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் அடை தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக இஞ்சி துவையலை செய்து சாப்பிடுங்கள். இந்த டிபன் காம்போ சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு அடை தோசையும், இஞ்சி துவையலையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடை தோசை மற்றும் இஞ்சி துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* இட்லி அரிசி - 1 டம்ளர்
* பாசிப்பருப்பு - 1/4 டம்ளர்
* துவரம் பருப்பு - 1/4 டம்ளர்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/4 டம்ளர்
* தண்ணீர் - தேவையான அளவு
* வரமிளகாய் - 6
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 10 பல்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
துவையலுக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 150 கிராம் (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இட்லி அரிசியை நீரில் 2 முறை கழுவி, பின் நீரை ஊற்றி 3
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்
பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நீரில் 2 முறை கழுவி,
பின் நீரை ஊற்றி, அதை 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பருப்பும், அரிசியும் ஊறிய பின், மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும்
சீரகத்தை சேர்த்து, முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கொரகொரவென்று அரைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே ஜாரில் ஊற வைத்த பருப்புக்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, கொரகொரவென்று அரைத்து, பாத்திரத்தில் உள்ள அரிசி மாவுடன்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து,
குறைந்தது 2 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பூண்டு
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, கொரகொரவென்று அரைத்து, பின்பு அதை
அரைத்த மாவுடன் சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,
முருங்கைக்கீரை, கொத்தமல்லி, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த மாவை தோசை
போன்று ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான அடை தோசை தயார்.
* அடுத்து துவையல் செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்த புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு ஈரப்பதமில்லாத மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து
முதலில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் புளியை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி கலவையை சேர்த்து லேசாக எண்ணெய்
பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நாட்டுச்சர்க்கரை மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்து நிறம் மாறி வந்ததும்,
அதை இறக்கினால், சுவையான இஞ்சி துவையல் தயார்.



Click it and Unblock the Notifications











