Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய்ப்பால் பாயாசம் ரெசிபி... இதை செஞ்சு அம்மனை வழிபடுங்க... அருள் பூரணமா கிடைக்கும்...!
Aadi Velli Special Thengaipal Payasam Recipe in Tamil: ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடுவதற்கான சிறந்த மாதமாக இருக்கும். ஆடி மாதம் முழுவதும் பல்வேறு விஷேச நிகழ்வுகள் நிறைந்திருக்கும். அதிலும் ஆடி மாத வெள்ளிக் கிழமை மிகவும் விஷேசமானது. இந்த நாளில் அம்மனை வழிபடுவது உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றும். மேலும் இந்த நாளில் சிறப்பு நெய்வேத்தியம் செய்து அம்மனை வழிபடுவது நல்லது.
செட்டிநாட்டு அசைவம் முதல் செட்டிநாட்டு ரசம் வரை அனைத்து உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது, அதில் இனிப்பு வகைகளும் அடங்கும். வீட்டில் செய்யும் இனிப்புகள் என்று வரும் போது அதில் முதலிடத்தில் இருப்பது பாயாசம்தான். ஜவ்வரிசி பாயாசம், பால் பாயாசம், மற்றும் பாசி பருப்பு பாயாசம் என அதிலும் பல வகை உண்டு. அந்த வரிசையில் நாம் இங்கு செட்டிநாட்டு தேங்காய் பால் பாயாசம். ஆடி வெள்ளி அன்று அம்மனை இந்த தேங்காய் பால் பாயாசம் செய்து வழிபட்டு அம்மனின் அருளைப் பெறுங்கள்.

தேவையானப் பொருட்கள்:
- முற்றிய தேங்காய் - 1
- பச்சரிசி - 4 டேபிள் ஸ்பூன்
- உடைத்த வெல்லம் - 1 கப்
- சுக்குப்பொடி - 1 சிட்டிகை
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரிப் பருப்பு - 10
- திராட்சை - 10
- ஏலக்காய் - 3
- பச்சைக் கற்பூரம் 1 சிட்டிகை
செய்முறை:
- தேங்காயை உடைத்து அதில் ஒரு மூடியை துருவியோ அல்லது நறுக்கியோ மிக்சியில் போட்டு சிறிது நீருடன் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- முதல் முறை வடிகட்டிய பிறகு, மீண்டும் ஒருமுறை அரைத்து இரண்டாவது முறையில் பால் எடுத்துக் கொள்ளவும்.
- மீதமுள்ள தேங்காய்த் துருவலுடன், ஒரு மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை மிக்சியில் போட்டு சற்று அரைத்து மேலும் இரண்டாம் முறை அரைத்த தேங்காய்ப்பாலை சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- பின்னர் அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, முந்திரிப் பருப்பு, திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
- பிறகு அதே பாத்திரத்தில் மெல்லிய தீயில் அரைத்த விழுது, 4 கப் நீர் சேர்த்து நன்கு வேகும் வரை மெல்லிய தீயிலேயே கிளறவும்.
- அரிசி நன்கு வெந்தவுடன் தண்ணீருடன் தயாரித்து வைத்த வெல்லப்பாகு மற்றும் முதல் முறை அரைத்த தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு ஒரு கொதி விடவும்
- பிறகு சுக்குப்பொடி, ஏலக்காய் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை போட்டு பச்சைக் கற்பூரத்தை நசுக்கி போட்டு இறக்கினால் சூப்பரான தேங்காய்ப்பால் பாயாசம் ரெடி.
- தேங்காய், பச்சரிசி அரைத்த விழுதைக் கொதிக்க விடுகையில் அடிபிடித்து விடாமல் இருக்க அடுப்பை மெல்லிய தீயில் எரிய விடுவது அவசியம்
- வீட்டில் ஒருவேளை தேங்காய் இல்லையென்றால் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்ப்பாலை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications