Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Aadi Amavasai Special Payasam Recipe In Tamil: ஆடி அமாவாசை நாளில் வடை பாயாசத்துடன் சமைத்து முன்னோர்களுக்கு படைத்து வழிபாடு செய்வது வழக்கம். உங்கள் வீட்டிலும் அப்படி தான் செய்வீர்களா? இந்த ஆடி அமாவாசைக்கு சற்று வித்தியாசமான சுவையில் பாயாசம் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சட்டென்று 10 நிமிடத்தில் ஒரு சுவையான பாயாசம் செய்ய வேண்டுமா?

உங்கள் வீட்டில் ஜவ்வரிசியும், பாசிப்பருப்பும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு குக்கர் பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* ஜவ்வரிசி - 1/4 கப்
* பாசிப்பருப்பு - 1 கப்
* சுடுநீர் - 4 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 100 மிலி
* பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
ப்ரை செய்வதற்கு..
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், ஜவ்வரிசியை சேர்த்து ப்ரை செய்ய வேண்டும்.
* பின் அதில் பாசிப்பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் 4 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 1 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் பொடித்த வெல்லத்தை
சேர்த்து கலந்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து
ப்ரை செய்து, அதை பாயாசத்துடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 1 சிட்டிகை பச்சை
கற்பூரத்தை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications
