Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஆடி அமாவாசை ஸ்பெஷலா.. அடுப்பே இல்லாம பாயாசம் செய்யலாம் தெரியுமா?- எப்படின்னு பாருங்க...
Aadi Amavasai 2024 Special Coconut Milk Payasam Without Fire: இன்று ஆடி அமாவாசை என்பதால் பலரது வீடுகளில் வடை பாயாசத்துடன் சமையல் செய்து, முன்னோர்களுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். நீங்கள் உங்கள் வீட்டில் பாயாசம் செய்வதாக இருந்தால் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா?
சற்று வித்தியாசமான சுவையில் பாசாயம் செய்து கொடுக்க உங்கள் வீட்டில் உள்ளோர் கேட்கிறார்களா? அப்படியானால் தேங்காய் பால் பாயாசம் செய்யுங்கள். அதுவும் அடுப்பே இல்லாமல் சூப்பரான சுவையில் பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இது சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியும் கூட.

உங்களுக்கு அடுப்பே இல்லாமல் பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடுப்பு பயன்படுத்தாமல் எப்படி பாயாசம் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாதாம் பிசின் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
* பாதாம் - 15
* முந்திரி - 15
* தேங்காய் - 1
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* பாதாம், முந்திரி, பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினை
எடுத்து, அத்துடன் 2 டம்ளர் நீரை ஊற்றி, குறைந்தது 5 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாதாம் மற்றும் முந்திரியை சுடுநீரில் போட்டு 2 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு,
ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு முழு தேங்காயை எடுத்து, அதை அரைத்து தேங்காய் பால்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த பாதாம் பிசினை எடுத்து, அத்துடன்
தேங்காய் பாலை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பாதாம், முந்திரியை சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன்
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி,
பிஸ்தாவை சேர்த்து நன்கு கலந்தால், சுவையான பாயாசம் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications








