Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
நீங்க குழந்தை பெத்துக்க முடிவு பண்ணி இருக்கீங்களா? அப்ப இந்த 4 காரணத்துக்காக மட்டும் குழந்தை பெத்துக்காதீங்க!
நீங்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு முன், நீங்கள் ஏன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? தம்பதிகள் இருவரும் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, அது ஒரு குடும்பமாக முழுமையடைகிறது.
இருப்பினும், குழந்தையை பெற்றுக்கொள்வது மற்றும் வளர்ப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. குழந்தைகளை வளர்ப்பதற்கு நீங்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். நீங்கள் கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும் முன் உங்கள் துணையுடன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உங்கள் நோக்கத்தைப் பற்றி விவாதிப்பது முக்கியம்.

பல தம்பதிகள் விரும்பி குழந்தையை பெற்றுக்கொள்கிறார்கள். சில தம்பதிகள் சில காரணங்களுக்காக குழந்தையை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால், அவை முற்றிலும் தவறானது. குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள பலர் நம்பும் ஐந்து தவறான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பேரக்குழந்தையை பார்க்க விரும்பும் பெற்றோர்களுக்காக...
பெரும்பலான வீடுகளில் தம்பதிகளின் பெற்றோர்கள் தங்கள் பேரக்குழந்தைகளைப் பார்க்க விரும்புவதாகவும், சீக்கிரமாக குழந்தை பெற்று தருமாறும் அழுத்தம் கொடுக்கிறார்கள். உங்கள் வீட்டிலும் பெற்றோர் அல்லது மாமியார் அவர்களின் பேரக்குழந்தைகளை பெற்றுக்கொடுக்குமாறு உங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்களா? ஆம். எனில், இதற்காக நீங்கள் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இப்படி பெற்றுக்கொண்டால், நீங்கள் குழந்தைக்கு பெற்றோராக இருப்பீர்கள். ஆனால், அது உங்களுக்கு ஓர் சுமையாக இருக்கும். அதனால், நீங்கள் விரும்பும் போது குழந்தைகளை பெற்றுக்கொள்வது முக்கியம், உங்கள் பெற்றோர் அல்லது மாமியார் விரும்பும் போது அல்ல. உங்கள் வருங்கால குழந்தைகளை தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சில தாத்தா பாட்டிகளும் சொல்லலாம்.
இருப்பினும், நீங்கள் மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்க்க விரும்பினால், நீங்கள் ஈடுபாடுள்ள பெற்றோராக இருக்க வேண்டும். உங்கள் விருப்பப்படி, உங்கள் பிள்ளையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தம்பதிகளை நெருக்கமாக்கும் என்பதற்காக...
திருமணமான தம்பதியர் கடினமான காலகட்டத்தை சூழ்நிலையை சந்திக்கும் போது, பலர் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுவார்கள். உங்கள் கவலைகளை மறந்து உங்கள் துணையுடன் உங்கள் பிணைப்பை அதிகரிக்க ஒரு முகவராக செயல்பட குழந்தை உங்களுக்கு உதவும் என்று கூறுவார்கள்.
இது உதவக்கூடும் என்றாலும், அது உதவவில்லை என்றால், அது உங்கள் நிலைமையை மோசமாக்கும். இது பெற்றோர் என்ற பொறுப்பை சுமையாக மாற்றலாம். ஒரு தேவைக்காக குழந்தையை பெற்றுக்கொள்ள நினைக்காதீர்கள். விருப்பத்திற்காக மட்டுமே குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆண் அல்லது பெண் என்பதை நிரூபிப்பதற்கான வழியாக...
திருமணத்திற்குப் பின் குழந்தைகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சமூகத்தில் நாம் வாழ்வதால், அதற்கு எதிராகத் திட்டமிட்டால், உங்களை இந்த சமூகம் புறக்கணிக்கும். ஒரு பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ அவர்களை ஏற்க மறுத்து, அவர்களுக்கு மலடி அல்லது ஆண்மை இல்லாதவன் என்ற பட்டத்தை கொடுப்பார்கள்.
இந்த வதந்திகளைப் பற்றிய பயம், திருமணத்திற்குப் பிறகு விரைவில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தம்பதிகளைத் தள்ளக்கூடும். அவர்கள் உண்மையிலேயே இப்போது குழந்தைகளை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள்.
மற்ற குடும்பங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க விரும்பவில்லை
பல திருமணமான தம்பதிகள் சமூக அழுத்தத்தால் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களது திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களில், அவர்களைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் 'நல்ல செய்தி இல்லையா?' என்று தொடர்ந்து கேட்கிறார்கள். "எல்லோரும் குழந்தை பெற்றிருக்கிறார்கள்" என்பதற்காக நீங்கள் குழந்தைகளைப் பெறக்கூடாது.
குழந்தைகளுக்காக நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், இறுதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம். இது பெற்றோர் இருவருக்கும் பொருந்தும். கடமைக்காவும் சமூகத்திற்காகவும் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது.
ஆசைகளை குழந்தைகளை வைத்து நிறைவேற்றிக்கொள்வதற்காக...
கிட்டத்தட்ட அனைவருக்கும் நிறைவேறாத சில கனவுகள் மற்றும் ஆசைகள் இருக்கும். இருப்பினும், வாழ்க்கையில் நீங்கள் தவறவிட்ட விஷயங்களைச் சாதிப்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பது தவறானது. உங்களுடைய ஆசைகளை இன்னொரு உயிர் மேல் திணிப்பது முற்றிலும் தவறானது. ஏனெனில், குழந்தைகள் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட அடையாளத்தைக் கொண்டிருப்பார்கள்.
மேலும் அவர்களின் கனவுகள் மற்றும் இலக்குகள் அவர்கள் வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றுடன் ஒத்துப்போகாமல் இருக்கலாம். இதைப் பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியாவிட்டால், உங்கள் கனவுகளால் உங்கள் குழந்தை சுமையாக உணரலாம்.



Click it and Unblock the Notifications
