Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
புதிதாகப் பிறந்த குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
கர்ப்பிணிப் பெண் கருவுற்றது முதல் தனது எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். கருவுற்றதில் இருந்தே வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நல்ல கவனம் செலுத்த வேண்டும்.. காரணம் நீங்கள் உண்ணும் உணவும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஊட்டமாக மாறி, கரு நல்ல எடையுடன் வளர்கிறது.
கருவின் எடை அதிகரித்தால், குழந்தை பிறப்பது கடினம். எனவே கர்ப்பிணி எப்போதும் போதுமான எடையை பராமரிக்க வேண்டும்.. சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு குழந்தைகள் எடை குறைவது இயல்பானது. சராசரியாக, ஒரு குழந்தை முதல் 5 நாட்களில் அதன் எடையில் 5 முதல் 6 சதவீதம் வரை இழக்கிறது. முதல் மூன்று நாட்களில் இது 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால், உங்களுக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்று பார்க்கவும். உங்கள குழந்தை பிறக்கும்போது என்ன எடை இருந்தால் நல்லது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. குழந்தையின் எடை சரியாக இருக்க குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக கொடுக்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் வழக்கமான மலம் இருந்தால், இரண்டு நாட்களுக்குப் பிறகு எடையை சரிபார்க்க வேண்டும்..
2. பிறக்கும்போதே குழந்தைகள் சற்று அதிக எடையுடன் பிறக்கின்றனர். முதல் சில நாட்களில் தாய்ப்பாலின் எடை குறையும். குழந்தை பிறந்தது முதல் 14 சதவீதம் வரை எடை குறைந்தால், தாய்ப்பாலைத் தவிர மற்ற வகை பாலையும் கொடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் பொதுவாக இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இருந்து சுமார் 6 மாதங்கள் வரை மீண்டும் எடை அதிகரிக்கும்.
3. குழந்தை குறைகிறது அல்லது எடை கூடுகிறது என்பதற்காக எந்த சூழ்நிலையிலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். ஒரு குழந்தை பிறந்தவுடன் முதல் வாரத்தில் சராசரியாக 5 முதல் 6 சதவிகிதம் வரை எடை குறைவதும், இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இருந்து எடை அதிகரிப்பதும் இயல்பானது. தாய்ப்பால் கொடுப்பதற்கு தேவைப்பட்டால், ஒரு நிபுணரை அணுகுவது நல்லது..
4. புதிதாகப் பிறந்த குழந்தையின் எடை சரியாக 3 கிலோ இருந்தால் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.. கண்டிப்பாக குழந்தை 3 கிலோவாக இருக்க வேண்டும்.. அப்படி இல்லாமல் குறைவாக உள்ள குழந்தைகளின் எடையை எப்படி அதிகரிப்பது?
5. தாய்ப்பாலுடன் புதிதாகப் பிறந்த குழந்தையின் எடையை அதிகரிப்பதற்கான ஒரே வழி, நிலையாக தாய்க்கு பால் சுரப்பதை உறுதி செய்வதாகும். தாய்மார்கள் தங்கள் தாய்ப்பால் சுரப்பதை கண்காணித்து, பாலூட்டலை ஊக்குவிக்க ஊட்டச்சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.
6. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் எடை அதிகரிக்க, தாயின் உணவு முறை சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, உங்கள் குழந்தைக்கு நீங்களே பால் ஊட்டுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில் முடிந்தவரை புரதம், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களைச் சேர்த்துக் கொளவது நல்லது..
7. உடல் தசைகளின் வளர்ச்சிக்கு புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது உங்கள் உடல் எடையை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மருத்துவர்களின் அறிக்கையின்படி, பால், தயிர், சீஸ், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் எடையை அதிகரிக்க சிறந்ததாகக் கருதப்படுகிறது.
8. தாய்ப்பால் சுரக்க வைக்கும் உணவுப் பொருள்கள் அதிகமாக தாய் சாப்பிட வேண்டும்.. கீரை வகைகள் உணவில் முக்கியமாக இருக்கக் கூடிய ஒன்றாக இருப்பது நல்லது.. ஓட்ஸ் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஓட்ஸ் கஞ்சி குடித்தால், தாய்ப்பால் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். ...
பூண்டு பால், நட்ஸ், அருகம்புல் சாறு, முட்டை ஆகிவற்றை சாப்பிடுவது நல்லது..
9. குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் பிறக்கும் போது இருந்த எடையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். இவர்கள் ஒரு வருடத்தை பூர்த்தி செய்யும் போது பிறந்த நிலையை விட 3 மடங்கு எடையை கொண்டிருப்பார்கள். இவர்களது தலைகள் சுமார் 4 முதல் 5 அங்குலங்கள் வரை வளரும்.
10. மேலும் 2-வது ஆண்டில் குழந்தையின் வளர்ச்சி அவ்வளவாக வேகமாக இருக்காது. 1 மற்றும் 5 ஆண்டுகளுக்கு இடையில் உங்கள் குழந்தை ஆண்டுக்கு 5 பவுண்டுகள் வரை அதிகரிக்கலாம். எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டு குழந்தைகளுக்கு 1 வருடம் வரை தாய் பால் கொடுத்து வந்தால் நல்ல ஆரோக்கியமான எடையில் உங்கள் குழந்தை இருக்கும்..
24 மாதங்களில் 2 வருடங்களில் பெரும்பாலான குழந்தைகள் 4 முதல் 6 பவுண்டுகள் வரை அதிகரிக்கிறார்கள். அவர்களின் நீளமும் 3 முதல் 5 அங்குலங்கள் வரை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications