Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உங்க குழந்தைக்கு பெயர் வைக்கப் போறீங்களா? இந்த விஷயங்களை மறந்துராதீங்க... இல்லனா கஷ்டம்தான்...!
உங்கள் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கவலையான மற்றும் பதட்டமான ஒன்றாகும். மற்றவர்களை பின்தொடராமல் தனித்துவமான ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து அர்த்தமுள்ள நேர்த்தியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது வரை, இதில் பல விஷயங்கள் உள்ளன.
வழக்கத்தை விட பெயர் தனித்துவமாக இருந்தால், எதேவையற்ற விமர்சனங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ஒரு குழந்தைக்கு பெயரிடுவது முக்கிமான விஷயமாகும், ஏனெனில் அது அவர்களது இருப்பின் பிரிக்க முடியாத பகுதியாக மாறும், மேலும் உங்கள் குழந்தைக்கு ஒருபோதும் அவர்கள் சங்கடப்படும் பெயரை வைத்துவிடக்கூடாது. உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தை வளரும்போது அவர்களின் பெயர் பொருந்துமா?
நீங்கள் ஒரு குழந்தைக்கு மட்டுமல்ல, வயது வந்தவருக்கும் பெயரிடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே உங்கள் குழந்தை முதிர்வயதில் மிகவும் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றும் பெயருடன் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் பெயரைச் சொல்லி அழைப்பதை கற்பனை செய்து பாருங்கள். எந்த நேரத்திலும் அது மிகவும் முதிர்ச்சியற்றதாக தோன்றினால், அந்த பெயர் வைக்கும் சிந்தனையை கைவிடவும்.
நல்ல செல்லப்பெயராக இருக்குமா?
பல பெயர்கள் அழகான புனைப்பெயர்களை உருவாக்குகின்றன, ஆனால் சில பெயர்கள் கேலிக்குரியதாக மாறலாம். எனவே சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேடலில் நீங்கள் இருக்கும்போது, பெயருடன் ரைமிங்காக இருக்கும் சொற்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். அந்த வார்த்தைகள் உங்களை சிரிக்க வைக்கவில்லை என்றால், அந்த பெயரை தேர்ந்தெடுங்கள்.பெயரின் சுருக்கப்பட்ட விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அதை முழுவதுமாகத் தவிர்க்கலாம்.
பெயர் மிகவும் பொதுவானதா?
பெயரை கூகிள் செய்வதன் மூலம் அதன் பிரபலத்தை தெரிந்து கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, வகுப்பில் ஏற்கனவே 5 பேர் வைத்திருக்கும் பெயருடன் உங்கள் குழந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும்படி வைக்காதீகள். உதாரணமாக கார்த்திக், சிவா மற்றும் ராஜா போன்ற பெயர்களில் வகுப்பிற்கு இரண்டு பேறாவது இருப்பார்கள். அப்போதைக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும் பெயரைத் தேர்வு செய்யாதீர்கள், சில வருடங்கள் கழித்து நீங்கள் வருத்தப்படலாம்.
உங்களுக்கு பிடித்த நடிகர்களின் பெயர்கள்
உங்களுக்குப் பிடித்த நடிகர்/நடிகையின் பெயரை உங்கள் குழந்தைக்குச் சூட்டுவதில் நீங்கள் உற்சாகமடையலாம். ஆனால் அதனை நீங்கள் ஒரு காரணமாக அனைவரிடமும் கூறுவது நன்றாக இருக்குமா என்பதை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.
உச்சரிக்க எளிதாக இருக்கிறதா?
இது மிகவும் தந்திரமான ஒன்று. உங்கள் குழந்தைக்கு சரியான பெயரை நீங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்று நீங்கள் நினைத்தாலும், சில குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை உச்சரிக்கச் செய்து, அவர்களால் அதனை சரியாக உச்சரிக்க முடிகிறதா என்பதை பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் உங்கள் குழந்தையின் பெயரை அனைவரும் தவறாக உச்சரிப்பது மிகவும் எரிச்சலூட்டும் ஒன்றாக இருக்கும்.
பெயர் உங்கள் குழந்தைக்கு நம்பிக்கையை அளிக்குமா?
உங்கள் குழந்தைக்கான பெயரை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் குழந்தையின் பார்வையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள், மற்றவர்களுடன் பேசும்போதும், தன்னை அறிமுகப்படுத்தும்போதும் அவர் எப்படி உணருவார். ஒரு பெற்றோராக கேலிக்குரிய பெயர்களைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.



Click it and Unblock the Notifications

