Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
பிரசவ வலி முன்கூட்டியே வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் பத்மப்ரியா!
தாய்மை என்பது அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். இந்த காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு அச்சங்களுக்கும், குழப்பங்களுக்கும் ஆளாவார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தோன்றும் முக்கிய அச்சங்களில் ஒன்று பிரசவ வலி பற்றியதாகும். சிலசமயங்களில் முன்கூட்டியே பிரசவவலி வருவதென்பது உங்களை பயம்கொள்ள செய்யலாம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பிரசவ வலி ஏற்படுவதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை முன்கூட்டியே கண்டறிவது பல ஆபத்துக்களைத் தடுக்கும். மேலும் சிறந்தது என்னவென்றால் அந்த வலிக்கான தீர்வுகளும், நிவாரணிகளும்பி தற்போது ஏராளமாக உள்ளது. முன்கூட்டியே வரும் பிரசவ வலி என்பது குறித்த நாளிற்கு 2 அல்லது 3 வாரத்திற்கு முன்னரே உங்கள் உடல் தயாராகிறது என்பதாகும்.

இதுபோன்ற வலி ஏற்படுவது பிரசவத்தை சிரமப்படுத்துவதோடு குழந்தைக்கு ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இப்பொது மருத்துவர்கள் குறிப்பிட்ட தேதியில் பிரசவம் நடக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள்.
கருத்தரித்தல் மற்றும் பிரசவத்தில் உள்ள அதிசய விதி யாதெனில் குழந்தை அம்மாவின் வயிற்றில் எவ்வளவு நாள் இருக்கிறதோ அவ்வளவு ஆரோக்கியம் பெறுவார்கள். எனவே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது. பிரசவ வலி வரப்போவதை முன்கூட்டியே சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். அவை என்னென்ன அறிகுறிகள் என்று நம்மிடம் விளக்குகிறார் பெண்கள் நல மருத்துவர் பத்மப்பிரியா.
முதுகுவலி
இயல்பாகவே கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவு முதுகு வலியால் அவதிப்படுவார்கள். இந்த வலி என்ன செய்தாலும் நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும். ஆனால் பிரசவ வலி நெருங்கும் போது இந்த வலி வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், குறிப்பாக கீழ்ப்புற முதுகுப்பகுதியில் அதிக வலி இருக்கும்.
பெண்ணுறுப்பில் கசிவு அதிகரித்தல்
முன்கூட்டியே பிரசவ வலி ஏற்படும் காலத்தில் பிறப்புறுப்பில் இரத்த கசிவு அதிகமாய் இருக்கும். பிரசவ காலம் நெருங்கியவுடன் சிறிய இரத்த கசிவாக இருப்பினும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும், இது நிலைமையை சமாளிக்க உதவும்.
அழுத்தம் அதிகரித்தல்
பிரசவ வலி ஏற்படுவதற்கு முன் பெண்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை நீங்கள் அனுபவிப்பார்கள் மற்றும் பிறப்புறுப்பில் வலி ஏற்படும். இது பிரசவ வலி முன்கூட்டியே வரபோவதற்கான முக்கியமான அறிகுறியாகும்.
குமட்டல், வாந்தி, மற்றும் காய்ச்சல்
கர்ப்ப காலத்தில் சிறிது காய்ச்சல் அடிப்பது போல் உணர்ந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இதன் அறிகுறிகள் குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியாகாவும் இருக்கலாம். திரவ உணவுகளை 8 மணி நேரத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தாலும் மருத்துவரை தொடர்புகொள்ளுங்கள்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக நீங்கள் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது பிரசவம் நெருங்கி விட்டதற்கான அர்த்தமாகும். பிரசவத்தை நெருங்கும் பல பெண்கள் குழந்தையின் தலையின் தாழ்வான நிலை காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலை அனுபவிக்கலாம், இது சிறுநீர்ப்பையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
சுருக்கங்கள்
வயிற்றுப்பகுதியில் ஒவ்வொரு பத்து நிமிட இடைவெளியில் நீங்கள் சுருக்கங்களை அனுபவித்தால், மருத்துவரை நிச்சயமாக தொடர்புகொள்ள வேண்டும். ஏனெனில் பிரசவ வலி வரப்போவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பிடிப்புகள்
உங்கள் அடிவயிற்றில் மாதவிடாய் காலத்தில் ஏற்படுவது போன்ற பிடிப்புகளை உணர்ந்தால், இது முன்கூட்டியே பிரசவ வலி ஏற்படுவதற்கான உறுதியான அறிகுறியாகும். எனவே உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.
என்ன செய்ய வேண்டும்?
சுருக்கங்களைச் சோதிக்கவும், முன்கூட்டியே பிரசவ வலி ஏற்படுமா என்பதைப் புரிந்து கொள்வதில் இது ஒரு முக்கிய விதியாகும். உங்கள் விரல் நுனியின் மீது விரல் வைக்கவும், உங்கள் கருப்பை இறுக்கமாவதை உணர முடிந்தால், அது ஒரு சுருக்கம் ஆகும். சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க தொடர்ச்சியாக உடல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இது பொதுவாக சுருக்கங்களை தடுக்கும் வழிமுறையாகும். அறிகுறிகள் மோசமாகும்போதும் தொடர்ச்சியாக சுருக்கங்களை உணரும்போதும் மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியமாகும்.



Click it and Unblock the Notifications
