Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
உங்க குழந்தைங்க கிட்ட எப்பவும் கத்திக்கிட்டே இருக்கீங்களா? அது அவங்களுக்கு இந்த பெரிய பாதிப்பை ஏற்படுத்துமாம்!
பெரும்பாலும் எல்லா குழந்தைகளும் குழந்தை பருவத்தில் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் திட்டு வாங்கி இருப்பார்கள். குழந்தைகளை திட்டாத பெற்றோர்கள் மிகக்குறைவு. ஆனால், குழந்தைகளை வாய்மொழி வழியாக துன்புறுத்தும் படி பேசுவது மிகவும் தவறானது.
இதை பெரும்பலான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் எளிதாக செய்கிறார்கள். இவை குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இப்போது உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்கள் பெற்றோர்கள் திட்டியதை நீங்கள் நினைவு கூர்ந்தாலும், அல்லது உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வீட்டுப்பாடம் செய்யாததற்காகத் திட்டுவதைக் கவனித்திருப்பது எல்லாம் நினைவுக்கு வருகிறதா? பெரும்பாலான வீடுகளில் இது பொதுவானதாகவும் சாதாரணமானதாகவும் கருதப்படுகிறது. ஆனால், இவை முற்றிலும் தவறான செயல்.
அமெரிக்கா மற்றும் லண்டனில் இருந்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, குழந்தைகளை கத்துவது அல்லது திட்டுவது பாலியல் அல்லது உடல் ரீதியான துன்புறுத்தல் போலவே அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதைக் காட்டுகிறது. உங்கள் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் ஆய்வு சொல்லும் தகவல் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆய்வு கூறுவது
குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து ஓர் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது. அதில், வட கரோலினாவில் உள்ள விங்கேட் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் 149 அளவு மற்றும் 17 தரமான ஆய்வுகளில் குழந்தை பருவத்தில் வாய்மொழியாக துன்புறுத்துவது குறித்து (CVA) ஆய்வு செய்தனர்.
குழந்தை பருவத்தில் வாய்மொழி வழியாக துன்புறுத்தல் (CVA) செய்வது அதிகாரப்பூர்வமாக தவறான செயலின் வடிவமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர்.
குழந்தைகள் மீது வாய்மொழி துன்புறுத்தலில் ஈடுபடுவது
குழந்தை பருவத்தில் அவர்களை வாய்மொழியாக துன்புறுத்தல் செய்வது, மிகவும் பொதுவான நபர்களே. அவர்கள் பெற்றோர்கள், தாய்மார்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. வாய்மொழியாக துன்புறுத்தல் செய்வதற்கான விளைவுகள் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
துன்புறுத்தல் என்பது அடிப்படையான உணர்ச்சி மற்றும் உளவியல் விளைவுகளை உருவாக்குவதை பற்றியது. இதில் உடல் பருமன், அதிகரித்த கோபம், போதைப்பொருள் பயன்பாடு, மனச்சோர்வு மற்றும் சுய-தீங்கு ஆகியவை அடங்கும் என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தை பருவ வாய்மொழி துன்புறுத்தலை புரிந்துகொள்வது
குழந்தை பருவ வாய்மொழி துன்புறுத்தலை புரிந்துகொள்வதற்கு வரையறுக்க சிறந்த வழி இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது, குழந்தைப் பருவத் துன்புறுத்தல்களை உள்ளடக்கிய நான்கு பிரிவுகள் உள்ளன.
அவை உடல் ரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல், உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல் மற்றும் புறக்கணிப்பு. ஆய்வின்படி, குழந்தை பருவத்தில் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
வாய்மொழி துன்புறுத்தல் தவறான சிகிச்சையாகும்
தகாத வார்த்தைகளால் திட்டுவது மற்றும் மிரட்டுவது போன்ற வாய்மொழி துன்புறுத்தல்
ஒரு வகையான துன்புறுத்தல் என்று ஒப்புக்கொள்வது, அதைக் கண்டறிந்து தடுப்பதற்கான ஒரு "தொடக்கப் புள்ளி" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகளுடனான வாய்மொழித் தொடர்புகளின் போது பாதுகாப்பு, ஆதரவு மற்றும் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து வயது வந்தோருக்கான பயிற்சியையும் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தை பருவ வாய்மொழி துன்புறுத்தல் தவறானது என ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் வாழ்நாள் முழுவதும் எதிர்மறையான விளைவுகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
குழந்தைகளைக் கத்துவதை விட சிறந்த மாற்று வழிகள்
குழந்தைகளிடம் கத்துவதை விட பல சிறந்த மாற்று வழிகள் உள்ளன. அவை உங்கள் குழந்தைகளுக்கு முக்கியமான வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கும் போது அவர்களுடன் நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான உறவை உருவாக்க உதவும். உங்கள் பிள்ளையின் நடத்தை உங்களை விரக்தியடையச் செய்தாலும், அமைதியை கடைபிடியுங்கள்.
உங்கள் எதிர்பார்ப்புகளையும் விதிகளையும் உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்தால், அவர்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சில சமயங்களில், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு குறுகிய கால அவகாசம் உதவும். இது அவர்களின் நடத்தையைப் பிரதிபலிக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. மேலும் உங்கள் எண்ணங்களைச் சேகரிக்க இது உங்களுக்கு ஒரு தருணத்தை அளிக்கிறது. உங்கள் குழந்தையிடம் உங்கள் உணர்வுகளையும் கவலைகளையும் வெளிப்படுத்துங்கள்.
நிச்சயமாக உங்கள் குழந்தை புரிந்துகொண்டு, சரியாக நடப்பார்கள். பெற்றோர் - குழந்தை உறவில் ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான தகவல் தொடர்பு மிக முக்கியம். இது உங்களின் உறவை மேம்படுத்த உதவும்.



Click it and Unblock the Notifications












