Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம்
ஒவ்வொரு மகள்களும் தன் அப்பாவை பத்தி இப்படிதான் நினைச்சிட்டு இருக்கங்களாம்...அது என்ன தெரியுமா?
அப்பா-மகள் உறவு என்பது மிகவும் அற்புதமானது, புனிதமானது. எல்லா மகள்களுக்கும் தனது அப்பாதான் முதல் ஹீரோ. அதேபோல, பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அப்பா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். பெரும்பாலான அப்பாக்கள் தங்கள் மகளை, தன் அம்மாவாக பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு மகளின் வெற்றிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருப்பது அப்பாவாக இருக்கும். ஒவ்வொரு மகளுக்கு அவளின் அப்பா தன்னுடன் நிற்பதை விட சக்தி வாய்ந்த ஆதரவு வேறு எதுவுமில்லை. ஒரு மகள் தன் அப்பாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே உலகின் சக்தி வாய்ந்த ஆற்றல்.

யாருக்காகவும் எதற்காகவும் தன் அப்பாவை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதேபோல, அப்பாக்களும் தன் மகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தன் மகளுக்கு எந்த நிலையிலும் ஆதரவாகவும், அவளை உற்சாகப்படுத்தவும் அவர் மட்டுமே இருப்பார் என்பது மகள்களுக்குத் தெரியும். ஒவ்வொரு மகளும் தன் அப்பா மீது வைத்திருக்கும் நேர்மையான உணர்வுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கருத்தை எப்போதும் ஏற்றுக்கொள்வார்
ஒரு மகளுக்கு அவளது குடும்பமே முதன்மையானது. இது அவளுடைய சொந்த அப்பாவை விட யாருக்குத் தெரியும்! ஒரு மகளுக்குத் தெரியும், சூழ்நிலை அல்லது காலம் எதுவாக இருந்தாலும், அவளுடைய கருத்தை அவளுடைய அப்பா நிராகரிக்க மாட்டார், எப்போதும் ஏற்றுக்கொள்வார். யாருமே விரும்பாத போது தன் பேச்சைக் கேட்பவர் தனது அப்பா என்பது ஒரு மக்களுக்குத் தெரியும்.
தனக்கான சிறந்த முடிவை எடுப்பார்
ஒரு மகள் தன் அப்பா மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குறைத்து மதிப்பிடாதீர்கள். எந்த தந்தையும் தன் மகள் மீது வைத்திருக்கும் அன்பை எதிர்க்கத் துணிவதில்லை. அப்பா எப்போதும் தனக்கான சிறந்த முடிவை எடுப்பார் என்பது ஒவ்வொரு மகளுக்கும் தெரியும்.
ஒரு அப்பாவைப் பொறுத்தவரை, அவரது முதல் காதல் எப்போதும் அவரது மகளாகவே இருக்கும். அவளுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக இருந்தாலும் அல்லது அவளுடைய வாழ்க்கையின் எல்லை வரை பங்கேற்பதாக இருந்தாலும், ஒரு அப்பா எப்போதும் தனது செல்ல மகள் மீது நல்ல உணர்வுகளைக் கொண்டிருப்பார்.
உண்மையான ஆணை உருவாக்குகிறார்கள்
'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று" என்ற வசனம் மிகவும் பிரபலமானது. ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்ற முதல் எண்ணத்தை அப்பாக்கள் தங்கள் மகள்களுக்கு உருவாக்குகிறார்கள். மகள்கள் ஆணை உருவாக்குகிறார்கள்.
வாழ்க்கைத் துணையைத் தேடும் போது, ஒரு பெண் எப்போதும் தன் தந்தையிடம் காணும் குணங்களையே, தனக்கு கணவனாக வரும் ஆணிடம் தேடுவது அடிக்கடி பார்க்கப்படுகிறது.
மகள் சொல்வதை தட்டாமல் கேட்பார்
பெண்கள் அப்பாவோடு அதிக நட்பாக பழகுவார்கள். ஏதேனும் பிரச்சனை என்றால் யாரிடம் சென்று ஆறுதல் கூறுவது என்பது அவர்களுக்குத் தெரியும். சில சமயங்களில், அப்பாக்கள் அமைதியான ஆறுதல் கூறுபவர்கள். அவர்கள் ஒரு சில வார்த்தைகளுக்கு மேல் பேச மாட்டார்கள், ஆனால் அவர்களின் அரவணைப்பும் ஆறுதலும் கஷ்டத்தை தீர்த்துவிடும்.
எப்பொழுதும் அன்பாக இருப்பார்
ஒவ்வொரு அப்பாவும் மகள்களிடம் மிகவும் அன்பாக இருப்பார். ஒவ்வொரு தந்தையும் மகளிடம் அதிக கருணையை காட்டுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் தவறு செய்ததற்காக அவளைத் திட்டலாம் அல்லது அவளுடைய சில செயல்களைக் கண்டிக்கலாம். ஆனால் அவர் அவளிடம் கருணை காட்டுவதை நிறுத்த மாட்டார்.
வலுவான ஆதரவாக இருப்பார்
தன் சுமையை பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மகள்களுக்கும் எப்போதாவது வலுவான தோள்கள் தேவைப்பட்டால், அது அவளுடைய தந்தையாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். அவர் எவ்வளவு வயதாகிவிட்டாலும் அல்லது எவ்வளவு நலிவடைந்தாலும், ஒரு அப்பா எப்போதும் தனது மகளின் சுமைகளை குறைக்க முன்வருவார்.



Click it and Unblock the Notifications
