Latest Updates
-
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்..
30 வயதில் தனது கருமுட்டையை சேமித்து வைத்த பிரியங்கா சோப்ரா - கருமுட்டை சேமிப்பு என்றால் என்ன?
Priyanka Chopra Frozen Her Eggs In 30s: பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென தனிப்பெயரை உருவாக்கி வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் பாடகரான நிக்கி ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் முகத்தை சமீபத்தில் தான் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் காட்டினார்.

ஆனால் பிரியங்கா சோப்ரா மற்றும் ஜோனாஸ் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்வதற்கு முன்னரே, தனது 30 வயதிலேயே தனது கருமுட்டையை மருத்துவ ஆலோசனையின் பேரில் சேமித்து வைத்துள்ளார் என்பது தெரியுமா? இதுக்குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தனது தாயாரின் ஆலோசனை
பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விஷயம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பிரியங்கா சோப்ரா இப்படியொரு முடிவை எடுத்ததற்கு அவரது மருத்துவ நிலைகள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
அதுவும் பிரியங்கா சோப்ராவின் தாயார் ஒரு மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணர். எனவே பிரியங்கா தனது தாயாரின் ஆலோசனையின் பேரில் தனது 30 வயதிலேயே கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளார். அதுவும் தனது காதல் கணவரான நிக்கியை சந்திப்பதற்கு முன்னரே பிரியங்கா தனது கருமுட்டைகளை சேமித்து வைத்திருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம் அவரது ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளும், திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஒருவித பதற்றத்தினாலும், தனது கருமுட்டைகளை சேமித்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்தரிப்பதில் சிரமம்
ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பின் பெண்கள் கருத்தரிப்பதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏன் சில சமயங்களில் முடியாமல் கூட போகலாம். இது தனது நண்பர்களுக்கு நடந்துள்ளதாக பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார். அதுவும் பெண்கள் 35 வயதை அடைந்து விட்டால், கருத்தரிப்பது மிகவும் கடினம். அதிலும் நிறைய வேலை செய்யும் பெண்களின் வயது அதிகரிக்கும் போது, அவர்களின் உடலின் வலிமையும் குறைந்து கொண்டே போகும்.
இந்த சூழ்நிலையில் நிறைய செலவுகளை செய்து குழந்தை பெற வேண்டியிருக்கும். இதற்கு பதிலாக இளம் வயதிலேயே கருமுட்டைகளை சேமித்து வைத்துக் கொண்டால், அந்த கருமுட்டையானது எந்த வயதில் சேமித்து வைத்தோமோ, அதே வயதில் இருக்கும். எனவே கருமுட்டையை சேமித்து வைக்கும் முறை மிகவும் சிறந்ததாகவே தோன்றுகிறது என்று பிரியங்கா தெரிவிக்கிறார்.
கருமுட்டை சேமிப்பு/கருமுட்டை உறைதல் என்றால் என்ன?
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருவுறாத கருமுட்டைகளை எடுத்து, அவற்றை எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக உறைய வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்தும் செயல்முறை தான் egg freezing அல்லது oocyte cryopreservation என்று அழைக்கப்படுகிறது.
கருமுட்டை சேமிப்பின் முக்கிய நன்மை
கருமுட்டையை இளம் வயதிலேயே சேமித்து வைக்கும் போது, பெண்கள் எதிர்காலத்தில் தனக்கு குழந்தை பிறக்குமோ, பிறக்காதோ என்ற பதட்டம் குறையும். ஏனெனில் தற்போது பல பெண்கள் வாழ்க்கையில் செட்டில் ஆன பின் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் அப்படி தள்ளிப் போடும் போது, ஒரு கட்டத்தில் குழந்தை பெற முடியாமல் போகும். இந்நிலையில் கருமுட்டையை சேமித்து வைத்திருந்தால், இதைத் தவிர்க்கலாம்.
யாரெல்லாம் கருமுட்டையை சேமித்து வைக்கலாம்?
* புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், அதற்கான சிகிச்சையை எடுக்கும் முன் கருமுட்டையை சேமித்து வைக்கலாம். ஏனெனில் புற்றுநோய் சிகிச்சையால் கருப்பையில் பாதிப்பு ஏற்படலாம்.
* எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனை உள்ள பெண்கள் தங்கள் கருமுட்டையை சேமித்து வைக்கலாம். மேலும் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்ட பெண்கள் தங்கள் கருமுட்டைகளை சேமித்து வைக்கலாம்.



Click it and Unblock the Notifications















