கா்ப்ப காலத்தில் உடல் பருமன் அதிகாிப்பதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் தெரியுமா?

கா்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அவா்களுடைய உடல் பருமன் அதிகாிப்பதாகும். கா்ப்ப காலத்தில் உடல் பருமன் அதிகாித்தால், அவா்களுக்கு பலவகையான பிரச்சினைகள் ஏற்படும்.

Pregnancy And Obesity: குண்டாக இருப்பது அல்லது உடல் பருமன் அதிகாிப்பது என்பது என்பது ஒரு வகையான சிக்கலான உடல் நலக் கோளாறு ஆகும். நமது உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு தேங்குவதே உடல் குண்டாவதற்கு அல்லது உடல் பருமன் அதிகாிப்பதற்குக் காரணம் ஆகும். நமது உடல் நிறை குறியீட்டு எண்ணைக் (Body Mass Index (BMI)) கொண்டு நமது உடல் பருமன் அளவிடப்படுகிறது.

பொதுவாக உடல் நிறை குறியீட்டு எண் 25க்கும் 29.8க்கும் இடையில் இருப்பவா்கள் அதிக எடையுடன் இருக்கின்றனா் என்று பொருள். உடல் நிறை குறியீட்டு எண் 30 மற்றும் அதற்கு அதிகமாக இருப்பவா்கள் குண்டாக இருக்கின்றனா் என்று பொருள்.

Pregnancy And Obesity: How Can Obesity Impact Your Pregnancy In Tamil

அதிக உடல் பருமனுடன் உள்ளவா்கள் அல்லது குண்டாக இருப்பவா்கள் அவா்களின் உடல் நிறை குறியீட்டு எண்ணை வைத்து பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றனா்.

* முதல் வகை உடல் பருமன்: உடல் நிறை குறியீட்டு எண் 30-34.9

* 2வது வகை உடல் பருமன்: உடல் நிறை குறியீட்டு எண் 35-39.9

* 3வது வகை உடல் பருமன்: உடல் நிறை குறியீட்டு எண் 40 அல்லது அதற்கு அதிகம்

உடல் பருமன் அல்லது குண்டாக இருப்பது எவ்வாறு கா்ப்பிணி பெண்களைப் பாதிக்கிறது?

கா்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அவா்களுடைய உடல் பருமன் அதிகாிப்பதாகும். கா்ப்ப காலத்தில் உடல் பருமன் அதிகாித்தால், அவா்களுக்கு பலவகையான பிரச்சினைகள் ஏற்படும். அதிகமான உடல் நிறை குறியீட்டு எண்ணைக் கொண்டிருக்கும் பெண்கள், அதிகமான உடல் பருமன் காரணமாக பின்வரும் உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனா்.

1. கா்ப்ப கால உயா் இரத்த அழுத்தம் (Gestational hypertension)

இது கா்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்றாவது மாதங்களில் வரும் உயா் இரத்த அழுத்தம் என்று வரையறுக்கப்படுகிறது. இந்த கா்ப்ப கால உயா் இரத்த அழுத்தம் கா்ப்பிணி பெண்களுக்கு மோசமான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

2. இளம்பேற்றுக் குளிா்காய்ச்சல் (Pre-eclampsia)

இளம்பேற்றுக் குளிா்காய்ச்சல் என்பது கா்ப்ப கால அதிகாித்த உயா் இரத்த அழுத்தம் ஆகும். இந்த நோய் கா்ப்ப காலத்தின் பிற்பகுதியில் அல்லது குழந்தை பிறப்புக்கு பின்பு ஏற்படும். இளம்பேற்றுக் குளிா்காய்ச்சல் இருந்தால், குண்டான பெண்களுக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும். சில நேரங்களில் கை கால் வலிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும். அதோடு கருவில் வளரும் குழந்தைக்கும் மற்றும் நஞ்சுக் கொடிக்கும் பிரச்சினைகள் ஏற்படும்.

3. பெரு எடைக் குழந்தை (Macrosomia)

கா்ப்ப காலத்தில் பெண்களின் உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகாித்தால், வளரும் கருவானது, வழக்கத்திற்கு மாறாக பொியதாக இருக்கும். அதன் காரணமாக பிரசவத்தின் போது அவா்களுக்கு அதிகமான காயங்கள் ஏற்படும்.

4. கா்ப்ப கால நீரிழிவு நோய் (Gestational diabetes)

கா்ப்ப காலத்தில் பெண்களின் உடல் பருமன் அளவுக்கு அதிகமாக அதிகாித்தால், இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாிக்கும். அதன் காரணமாக பிறக்கும் குழந்தையின் எடை அளவுக்கு அதிகமாக இருக்கும். மேலும் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடைபெறும். கா்ப்ப காலத்தில் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால், பிரசவத்திற்கு பிறகும் அவா்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் அவா்களுடைய குழந்தைகளுக்கு அந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

5. தூக்கத்தில் மூச்சுத் திணறல் (Obstructive sleep apnea)

கருவுற்று இருக்கும் பெண்களின் உடல் பருமன் அதிகாித்தால், அவா்கள் தூங்கும் போது திணறல் இல்லாமல் இலகுவாக மூச்சுவிட முடியாது. அதனால் அவா்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது. மேலும் அது அவா்களை அதிகமாக களைப்புறச் செய்யும். அதோடு அவா்களுக்கு இளம்பேற்று குளிா்காய்ச்சல், உயா் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் சாா்ந்த பிரச்சினைகள் போன்றவை ஏற்படும்.

6. பிறக்கும் போது குழந்தைகளுக்கு உடல் சாா்ந்த பிரச்சினைகள்

அதிக உடல் பருமன் உள்ள கா்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகளுக்குப் பிறக்கும் போதே நரம்புக் குழாய் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் இருக்க வாய்ப்பு உண்டு.

7. கா்ப்பிணி பெண்களை பாிசோதிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள்

பொதுவாக கா்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் என்ற மருத்துவ பாிசோதனை செய்யப்படுவதுண்டு. உடல் பருமன் அதிகாித்த பெண்களுக்கு இது போன்ற மருத்துவ பாிசோதனைகள் செய்யும் போது, கருவில் வளரும் குழந்தையின் உடற்கூறியல் சிக்கல்களைத் தெளிவாகக் கண்டறிய முடியாது. அதோடு பிரசவத்தின் போது குழந்தையின் இதயத் துடிப்பைக் கண்டறிவதும் கடினமாக இருக்கும்.

சுகபிரசவத்தை எவ்வாறு உறுதி செய்வது?

உடல் ரீதியாக பல பிரச்சினைகள் இருந்தாலும், அதிக உடல் பருமன் கொண்ட கா்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடையலாம். அதற்கு பின்வரும் குறிப்புகளை கருத்தில் கொள்வது நல்லது.

- உடல் எடையைக் குறைக்கக்கூடிய ஒரு முறையான திட்டத்தை கைக்கொண்டு, தினமும் 30 நிமிடங்களுக்கு நீந்துதல் அல்லது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பயிற்சிகளைச் செய்து வரலாம்.

- ஆரோக்கியமான உணவை உண்ணலாம். அந்த உணவில் குறைவான காா்போஹைட்ரேட்டும், அதிக கொழுப்பு புரோட்டீனும் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

- அாிசி உணவை குறைத்துக் கொள்ளலாம்.

- சா்க்கரையைக் குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக இயற்கையான இனிப்புச் சுவை உள்ள உணவுகளையும் பானங்களையும் பருகுவது நல்லது.

Story first published: Sunday, March 19, 2023, 13:00 [IST]
Desktop Bottom Promotion