Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பிரசவ கால சிக்கல்களை உணர்த்தக்கூடிய சில எச்சரிக்கை அறிகுறிகள்!
காலத்தில் கர்ப்பிணிகள் வெளிப்புற காரணிகள், உடல்நிலை அல்லது வேறு சில அசம்பாவிதங்கள் போன்றவை இந்த உணர்திறன் மிக்க காலகட்டத்தில் சில சிக்கல்கள் தோன்ற காரணமாக இருக்கக்கூடும்.
கர்ப்பகாலம் என்பது மகிழ்ச்சியான ஒரு காலகட்டம். இருப்பினும் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். எளிமையான பிரசவத்திற்கு போதுமான ஓய்வு மிகவும் அவசியம். இருப்பினும் முழுமையான கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சில வகை சிக்கல்களை அனுபவிக்க நேரலாம்.

வெளிப்புற காரணிகள், உடல்நிலை அல்லது வேறு சில அசம்பாவிதங்கள் போன்றவை இந்த உணர்திறன் மிக்க காலகட்டத்தில் சில சிக்கல்கள் தோன்ற காரணமாக இருக்கக்கூடும். இங்கு சில எச்சரிக்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் குறித்து கவனத்துடன் இருப்பதால் கர்ப்ப காலத்தில் உண்டாகும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

வலியுடன் கூடிய சுருக்கம்
சிறு அளவிலான வயிறு வலி என்பது கர்ப்ப காலத்தில் பொதுவானதாக இருந்தாலும் வயிறு அதிக அளவு சுருங்கி விரிவதற்கான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டால் அது தீவிர நிலையை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். பிரசவ தேதிக்கு முன்கூட்டியே இந்த வகையான வலி அதிகரித்து காணப்பட்டால் இது பிரசவ வலியாகவும் இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.

அதிகமான இரத்தப்போக்கு
கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் பல பெண்கள் இரத்தப்போக்கு குறித்து மருத்துவரிடம் கூறுவார்கள். இது ஒரு இயல்பான செய்தியாகும். ஆனால் கர்ப்ப காலத்தின் இறுதியில் உங்களுக்கு மிக அதிக இரத்தப்போக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்தால் அதனை நிச்சயம் அலட்சியம் செய்ய வேண்டாம். நஞ்சுக்கொடி அசாதாரணமான நிலையில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய இரத்தப்போக்கு மிக அதிக ஆபத்தை உண்டாக்கக்கூடும், மேலும் குழந்தை மற்றும் தாய்க்கு அதிக சிக்கலை உண்டாக்கக்கூடும்.

பிறப்புறுப்பில் நீர் வெளிவருவது
பிறப்புறுப்பில் வெளியேற்றம் என்பது கர்ப்ப காலத்தில் பொதுவானதாக இருந்தாலும், அதிகரித்த திரவ வெளியேற்றம் என்பது ஆபத்தானது. பொதுவாக இது பனிக்குடம் உடைவதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் பிரசவ தேதிக்கு முன்னதாக இந்த அறிகுறி ஏற்பட்டால் அது தீவிர நிலையை உணர்த்தலாம். பொதுவாக பனிக்குட நீரில் குழந்தை சுற்றப்பட்டிருக்கும், மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த நீர் மிகவும் அத்தியாவசியமானது. அதனால் பனிக்குடம் பிரசவ தேதிக்கு முன்கூட்டியே உடைவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

பார்வைக் கோளாறு
கர்ப்ப காலத்தின் இறுதி இரண்டு மாதங்களில் மயக்கம் மற்றும் பார்வை மங்குதல் போன்றவை ஏற்படலாம். குறிப்பிட்ட வேலையில் கவனமாக இருக்கும் போது பார்வை மங்குதல் போன்ற குறைபாடு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். நீரிழிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த அறிகுறி மிகவும் ஆபத்தான விளைவை உண்டாக்கக்கூடும்.

கால் பாதம் மற்றும் கைகளில் வீக்கம்
மேலே கூறிய அறிகுறிகள் போலவே, கர்ப்ப காலத்தில் கால் பாதம், கைகள் போன்றவற்றில் வீக்கம் ஏற்படுவது வழக்கமான விஷயம்தான். ஆனால் வீக்கத்துடன் தடிப்புகள் மற்றும் சருமம் சிவந்து போவது போன்ற அறிகுறிகளும் இணைந்திருந்தால் அது கவனிக்க வேண்டியதாகிறது. இரத்த உறைவு இதற்கு பின்னால் இருக்கும் காரணமாக இருக்கலாம். அதனால் உங்கள் சருமத்தில் ஏற்படும் அசாதாரண நிலை குறித்த கவனம் எப்போதும் இருக்க வேண்டும். உங்கள் கைகள், கால் பாதம், முகம் போன்ற இடங்களில் வலியுடன் கூடிய வீக்கம் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.



Click it and Unblock the Notifications