For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பகாலத்தின் போது ஒரு வாரத்திற்கு நீங்கள் எத்தனை கிலோ எடை அதிகரிக்க வேண்டும் தெரியுமா

உங்கள் கர்ப்பகாலத்தின் போது நீங்கள் எத்தனை கிலோ எடை அதிகரிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? தாய்மார்கள் தங்கள் கர்ப்பகாலத்தின் போது எத்தனை கிலோ எடை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சார்ட

|

உங்கள் கர்ப்பகாலத்தின் போது நீங்கள் எத்தனை கிலோ எடை அதிகரிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? தாய்மார்கள் தங்கள் கர்ப்பகாலத்தின் போது எத்தனை கிலோ எடை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சார்ட் பரிந்துரைக்கிறார்கள். அதாவது கர்ப்ப காலத்தின் போது உங்கள் உயரத்திற்கு ஏற்ப மற்றும் உங்கள் ஒவ்வொரு வாரத்திலும் எத்தனை கிலோ எடை அதிகரிக்க வேண்டும் என்பதையும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Weight you Should Gain During Pregnancy

கர்ப்பகாலம் என்பது உங்கள் வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் அற்புதமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தின் போது உடல் எடை கூடுவதால் சிலர் கவலைக் கொள்கிறார்கள். இதற்கு கவலைக் கொள்ளாமல் உங்கள் உடலின் எடையை அதிகரிக்கலாம். ஆனால் எடை அதிகரிப்பு என்பது மெதுவாக மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவதால் ஏற்படும் ஒன்றாக இருக்க வேண்டும். உங்கள் உடலுக்குத் தேவையான எடையை எப்போதும் பராமரிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயரம்

உயரம்

உங்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு உங்கள் உயரம் என்ன என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை நீங்கள் கொண்டிருந்தாள் மட்டும் கரு வளர்ச்சி ஆரோக்கியமாக அமையும்.

MOST READ: கர்ப்ப காலத்தில் என்னென்ன சரும பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா?இப்படியெல்லாமா உங்கள் அழகை கெடுக்கும்

உயரம் 5 அடி

உயரம் 5 அடி

உயரம் 5 அடியாக இருக்கும் போது 46 கிலோவிற்கு குறைவாக இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட எடைக்கு குறைவாக உள்ளீர்கள் என்றும், 46 கிலோவுக்கு மேல் 60 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சரியான எடையில் உள்ளீர்கள் என்றும், 60 கிலோவுக்கு மேல் 66 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சற்று அதிக எடையில் உள்ளீர்கள் என்றும், 68 கிலோவுக்கு மேல் இருக்கும் போது மிகவும் உடல் பருமனாக இருக்கீறிர்கள் என்று அர்த்தம்.

உயரம் 5.2 அடி

உயரம் 5.2 அடி

உயரம் 5.2 அடியாக இருக்கும் போது 48 கிலோவிற்கு குறைவாக இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட எடைக்கு குறைவாக உள்ளீர்கள் என்றும், 49 கிலோவுக்கு மேல் 64 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சரியான எடையில் உள்ளீர்கள் என்றும், 65 கிலோவுக்கு மேல் 71 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சற்று அதிக எடையில் உள்ளீர்கள் என்றும், 72 கிலோவுக்கு மேல் இருக்கும் போது மிகவும் உடல் பருமனாக இருக்கீறிர்கள் என்று அர்த்தம்.

உயரம் 5.4 அடி

உயரம் 5.4 அடி

உயரம் 5.4 அடியாக இருக்கும் போது 52 கிலோவிற்கு குறைவாக இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட எடைக்கு குறைவாக உள்ளீர்கள் என்றும், 53 கிலோவுக்கு மேல் 68 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சரியான எடையில் உள்ளீர்கள் என்றும், 69 கிலோவுக்கு மேல் 77 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சற்று அதிக எடையில் உள்ளீர்கள் என்றும், 78 கிலோவுக்கு மேல் இருக்கும் போது மிகவும் உடல் பருமனாக இருக்கீறிர்கள் என்று அர்த்தம்.

உயரம் 5.6 அடி

உயரம் 5.6 அடி

உயரம் 5.6 அடியாக இருக்கும் போது 55 கிலோவிற்கு குறைவாக இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட எடைக்கு குறைவாக உள்ளீர்கள் என்றும், 56 கிலோவுக்கு மேல் 73 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சரியான எடையில் உள்ளீர்கள் என்றும், 74 கிலோவுக்கு மேல் 81 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சற்று அதிக எடையில் உள்ளீர்கள் என்றும், 82 கிலோவுக்கு மேல் இருக்கும் போது மிகவும் உடல் பருமனாக இருக்கீறிர்கள் என்று அர்த்தம்.

MOST READ: குழந்தைகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ பாதுகாப்பானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

உயரம் 5.10 அடி

உயரம் 5.10 அடி

உயரம் 5.10 அடியாக இருக்கும் போது 62 கிலோவிற்கு குறைவாக இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட எடைக்கு குறைவாக உள்ளீர்கள் என்றும், 63 கிலோவுக்கு மேல் 82 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சரியான எடையில் உள்ளீர்கள் என்றும், 83 கிலோவுக்கு மேல் 91 கிலோவிற்கு கீழ் இருக்கும் போது நீங்கள் சற்று அதிக எடையில் உள்ளீர்கள் என்றும், 92 கிலோவுக்கு மேல் இருக்கும் போது மிகவும் உடல் பருமனாக இருக்கீறிர்கள் என்று அர்த்தம்.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

உங்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு நீங்கள் எத்தனை கிலோ எடை இருக்க வேண்டும் என்று பார்த்தீர்கள். ஆனால் கர்ப்ப காலத்தின் 40 வாரங்களில் நீங்கள் எத்தனை கிலோ எடை ஏற்ற வேண்டும் என்பது பற்றியும் தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்த 40 வாரங்களுக்குள் 12 கிலோ முதல் 18 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். நீங்கள் சரியான எடையில் இருந்தால் 11 கிலோ முதல் 15 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக இருந்தால் 6 முதல் 11 கிலோ எடை அதிகரித்தல் போதுமானது. மேலும் சற்று அதிக பருமனாக உள்ளவர்கள் 4 முதல் 9 கிலோ எடை அதிகரித்தால் போதும்.

இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள்

நீங்கள் இரட்டை குழந்தைகளை சுமப்பவராக இருந்தால் உங்கள் எடையை சற்று அதிகமாகவே கூட்ட வேண்டியிருக்கும். நீங்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்த 40 வாரங்களுக்குள் 22 கிலோ முதல் 28 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். நீங்கள் சரியான எடையில் இருந்தால் 16 கிலோ முதல் 24 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக இருந்தால் 14 முதல் 22 கிலோ எடை அதிகரித்தல் போதுமானது. மேலும் சற்று அதிக பருமனாக உள்ளவர்கள் 11 முதல் 19 கிலோ எடை அதிகரித்தால் போதும்.

முதல் மூன்று மாதங்கள்

முதல் மூன்று மாதங்கள்

உங்கள் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் குறைந்தது 2 கிலோ எடையாவது அதிகரிக்க வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு நீங்கள் 150 கலோரி முதல் 200 கலோரிகள் எப்போதும் எடுத்துக்கொள்ளும் அளவை விட அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

நான்கு முதல் ஆறு

நான்கு முதல் ஆறு

கர்ப்ப காலத்தின் நான்காவது மாதம் முதல் ஆறாவது மாதத்திற்குள் 5 முதல் 6 கிலோ எடை அதிகரித்து இருக்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 300 கலோரிகள் எப்போதும் எடுத்துக் கொள்ளும் அளவை விட அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது கேரட் ஜூஸ் அல்லது மாதுளை போன்ற ஜூஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

MOST READ: கர்ப்பகாலத்தின் போது பெண்கள் நம்பக் கூடாத மூடநம்பிக்கைகள், மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஏழு முதல் ஒன்பது

ஏழு முதல் ஒன்பது

கர்ப்ப காலத்தின் ஏழாவது மாதம் முதல் ஒன்பதாவது மாதத்திற்குள் 4 முதல் 6 கிலோ எடை அதிகரித்து இருக்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 300 முதல் 450 கலோரிகள் எப்போதும் எடுத்துக் கொள்ளும் அளவை விட அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுடன் தக்காளி ஜூஸ் அல்லது கோதுமை பிரட் சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Much Weight you Should Gain During Pregnancy

Pregnancy is one time in your life when it's perfectly acceptable to put on pounds. But it's important to have slow and steady gain and to keep your weight within healthy range for your body type.
Desktop Bottom Promotion