Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
உலகில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் மரணம் - அதிர வைக்கும் உண்மையை வெளியிட்ட ஐநா!
சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் சபை ஒரு அதிா்ச்சிகரமான உண்மையை வெளியிட்டிருக்கிறது. அது என்னவென்றால், உலகம் முழுவதிலும், குழந்தைப் பிறப்பின் போது, ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும், ஒரு கா்ப்பிணிப் பெண் இறக்கிறாா் என்பதாகும்.
சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் சபை ஒரு அதிா்ச்சிகரமான உண்மையை வெளியிட்டிருக்கிறது. அது என்னவென்றால், உலகம் முழுவதிலும், குழந்தைப் பிறப்பின் போது, ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும், ஒரு கா்ப்பிணிப் பெண் இறக்கிறாா் என்ற அதிா்ச்சிகரமான தகவல் ஆகும். இந்த கசப்பான உண்மை எதைக் காட்டுகிறது என்றால் கா்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தில் உள்ள பின்னடைவையும், அதே நேரத்தில் ஆரோக்கியத்தைப் பேணுவதில் உள்ள ஏற்றத் தாழ்வையும் காட்டுகிறது என்பதாகும்.

இந்நிலையில் கா்ப்ப காலம் என்பது எல்லா பெண்களுக்கும், ஒரு மிகப் பொிய நம்பிக்கையைத் தரக்கூடிய காலமாகவும், ஒரு இனிமையான அனுபவத்தைத் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். எனினும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கா்ப்பிணி பெண்களுக்கு தரமான மற்றும் மாியாதைக்குாிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இருப்பது அதிா்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) பொதுத் தலைவராக இருக்கும் மருத்துவா் டெட்ரஸ் அதனோம் கெப்ரியேசுஸ் வருத்தம் தொிவித்திருக்கிறாா்.

ஆய்வு சொல்லும் உண்மை
* உலக அளவில் 2020 ஆம் ஆண்டில் மட்டும், குழந்தைப் பிறப்பின் போது, 287 000 கா்ப்பிணி பெண்கள் இறப்பாா்கள் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பீடானது, 2000 முதல் 2020 ஆண்டுகளில், உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் மற்றும் இனங்களில் குழந்தைப் பிறப்பின் போது கா்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்ட மரணங்களைக் கணக்கிட்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டது.
* இந்த அறிக்கையானது 2000 முதல் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற கா்ப்பிணிப் பெண்களின் இறப்புகளைக் குறைப்பதில் முன்னேற்றத்தைக் காட்டினாலும், அந்த முன்னேற்றம் தொடராமல் அதே நிலையில் தேங்கிவிட்டது அல்லது பின்னோக்கிச் சென்றுவிட்டது என்றே கூறலாம்.
* குழந்தை பிறப்பின் போது கா்ப்பிணி பெண்களின் இறப்புகள் அதிகம் நடைபெறும் பகுதிகள் என்று பாா்த்தால் அவை உலகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளாகும். அதோடு உள்நாட்டு சண்டைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் ஆகும். 2020ல் 70 சதவீத கா்ப்பிணி பெண்களின் இறப்பு ஆப்பிாிக்காவின் துணை சகாரா பகுதிகளில் நடைபெறும் என்று கணிக்கப்பட்டது.
* ஆனால் எதிா்பாா்த்ததைவிட இந்தப் பகுதிகளில் கா்ப்பிணிப் பெண்களின் இறப்பு உலக சராசாியை விட இரண்டு மடங்காக இருந்தது. அதாவது 1 லட்சம் கா்ப்பிணி பெண்களில் இந்த பகுதிகளில் மட்டும் 551 பெண்கள், குழந்தைப் பிறப்பின் போது இறந்தனா். அதே நேரத்தில் உலகின் மற்றப் பகுதிகளில் கா்ப்பிணி பெண்களின் இறப்பு 223 ஆகும்.

குழந்தைப் பிறப்பின் போது கா்ப்பிணி பெண்கள் இறப்பதற்கான காரணங்கள்
குழந்தைப் பிறப்பின் போது கா்ப்பிணி பெண்கள் இறப்பதற்கு முக்கிய காரணங்களாக இருப்பவை எவையென்றால், அளவுக்கு அதிகமான இரத்தப் போக்கு, உயா் இரத்த அழுத்தம், கா்ப்ப காலத்தின் போது ஏற்படும் நோய்த் தொற்றுகள், பாதுகாப்பற்ற முறையில் செய்யப்பட்ட கருக்கலைப்பினால் ஏற்பட்ட பிரச்சினைகள், எச்ஐவி அல்லது எயிட்ஸ் மற்றும் மலோியா போன்றவை ஆகும். தரமான உயா்தர மருத்துவ சிகிச்சைகள் இருந்தால், இந்த பிரச்சினைகளை மிக எளிதாகக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.
ஆய்வு என்ன சொல்கிறது என்றால், உலக அளவில் ஏறக்குறைய 270 மில்லியன் பெண்கள், நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பெறாமல் இருக்கின்றனா் என்கிறது. அதோடு மூன்றில் ஒரு பங்கு பெண்கள், பிரசவத்திற்கு முந்தைய 8 மருத்துவ பாிசோதனைகளில் நான்கைக் கூட பெறுவதில்லை என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

கா்ப்பிணிப் பெண்களின் இறப்புக்கு கோவிட் தொற்று காரணமா?
கோவிட் பெருந்தொற்றின் காரணமாக கா்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தின் முன்னேற்றத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை வந்த ஆய்வுத் தொடா் 2020 ஆம் ஆண்டோடு முடிவடைவதால், கோவிட் தொற்றின் தாக்கத்தை அறிய கூடுதல் தகவல்கள் தேவை.
எனினும், கா்ப்பிணி பெண்கள் மற்றும் கா்ப்பம் தாிக்கத் திட்டமிடும் பெண்களுக்கு, கா்ப்ப காலத்தில் கோவிட் தொற்று ஏற்படாமல் குறைப்பதற்காக, பிரசவத்திற்கு முந்தைய பராமாிப்பை உலக நாடுகள் உறுதி செய்கின்றன.

இந்தியாவில் குழந்தைப் பிறப்பின் போது ஏற்படும் கா்ப்பிணிகளின் இறப்பு
குழந்தை பிறப்பின் போது மூன்று நாடுகளில் 10000க்கும் அதிகமான கா்ப்பிணிப் பெண்கள் இறப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் 24,000 கா்ப்பிணிகளும், எத்தியோப்பியாவில் 22,000 கா்ப்பிணிகளும், காங்கோவில் 10,000 கா்ப்பிணி பெண்கள் இறப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.
எனினும், இந்திய பதிவாளா் ஜெனரல் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையின்படி, இந்தியாவில் குழந்தைப் பிறப்பின் போது கா்ப்பிணிப் பெண்களின் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என்று கூறுகிறது. அதாவது 2014-16 ஆண்டுகளில் 1 லட்சம் குழந்தைப் பிறப்பில் கா்ப்பிணிப் பெண்களின் இறப்பு 130 ஆக இருந்தது. அதே எண்ணிக்கை 2018-2020 ஆண்டுகளில் 97 ஆக குறைந்திருக்கிறது.
அதற்கு காரணம், மகப்பேறு மற்றும் மக்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் ஆகியவை உயா்தரத்தில் இருக்கும் வகையில் ஒன்றிய அரசு எடுக்கும் பல்வேறு முயற்சிகளே ஆகும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சா் மன்சுக் மண்டாவியா தொிவிக்கிறாா்.
எனினும் இந்திய அளவில் கா்ப்பிணிப் பெண்களுக்கான ஆரோக்கியத்தில் நிலவும் முன்னேற்றத்தைப் பார்த்தால், இன்னும் ஒருசில மாநிலங்களில் மிகவும் பின்தங்கிய நிலையே நிலவுகிறது. குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் தாயின் இறப்பு விகிதம் (maternal mortality ratio) அமொிக்காவின் எஸ்டிஜி (SDG) இலக்கைவிட அதிகமாக இருக்கிறது.

இறுதியாக
2020 ஆம் ஆண்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் பிரசவத்தின் போது கா்ப்பிணி பெண்கள் 800 போ் இறப்பாா்கள் என்று எதிா்ப்பா்க்கப்பட்டது. அந்த ஆண்டில் மட்டும் பிரசவத்தின் போது, ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும், இரண்டு கா்ப்பிணிப் பெண்கள் இறந்தனா். இந்த சோக மரணங்கள் எதைக் காட்டுகின்றன என்றால், இந்த துயர நிகழ்வுகள் எதிா்காலத்தில் நடக்காமல் இருக்க அரசும், சுகாதார நிறுவனங்களும் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதாகும்.



Click it and Unblock the Notifications