கர்ப்பகாலத்தில் அமர்ந்துக் கொண்டே இந்த எளிய ஆசனத்தை செய்யுங்கள்.. தித்லி ஆசனம்.

பட்டாம்பூச்சி உடற்பயிற்சி தித்லி ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி பொதுவாக ஒரு வார்ம் அப் பயிற்சியாகத் தான் செய்யப்படுகிறது என்பதால் இந்த உடற்பயிற்சியை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

By Haribalachandar Baskar

பெண்ணாக பிறந்த எல்லாரும் பெண்மையை முழுமையாக உணர்வது இந்தக் கர்ப்பக்காலத்தில் தான். இந்தக் கர்ப்பக்காலத்திற்காகத் தான் அவள்நீண்ட நெடிய வலிகளை மாதந்தோறும் தாங்கியிருக்கிறாள். சுறுசுறுப்பாக அடுப்படி, கணவர், அத்தை மாமா, என சுறுசுறுப்பாக சுழன்ற பெண், கர்ப்பகாலங்களில் முடங்கி சோர்ந்து போய் படுக்கையறையில் படுத்துக் கொள்கிறார்கள். எந்த வேலையும் செய்யக்கூடாது என்ற அன்புக்கட்டளையும் அவளுக்கு குடும்பத்தினரிடம் இருந்து இடப்படுகிறது. அதே சமயத்தில் இந்தக் கர்ப்பக்காலத்தில் தான் உடல்சோர்வு, மூச்சுவிடத் தடுமாறுதல், மனம் மாற்றம், வலி என பலவகையான இன்னல்களை அவள் சந்திக்க நேரிடுகிறது.

அதுமட்டுமில்லாமல் மனரீதியாகவும் அவள் பாதிக்கப்படுகிறாள். இந்தச் சமயத்தில் தான் உடற்பயிற்சிகள் உங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைகிறது. அதே சமயத்தில் இன்றைக்கு இருக்க கூடிய உணவுப்பழக்க வழக்கம், வாழ்க்கைமுறைக்கு உடற்பயிற்சி என்பது நிச்சயம் தேவையுள்ளதாக மாறி வருகிறது. தாயும் சேயும் நலமாக பிறப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு யோகா நிச்சயம் அவசியமாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

கர்ப்பகாலங்கல் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படுகிற சவால்களை சமாளிக்க உடற்பயிற்சி உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் சோர்ந்திருக்கும் கருத்தரித்த பெண்ணின் உடலுக்கு உறுதியை உடற்பயிற்சி தருகிறது. குழந்தை பிறப்பின் போது அதீத சக்தி பெண் பெற்றிருக்க வேண்டுமல்லவா? அந்த சமயத்தில் உங்கள் உடலின் மிகவும் தேவையான சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுவதால் உங்களை உற்சாகமாகவும் நேர்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது பிரசவத்திற்கான முந்தையகாலங்களில் உங்கள் உடலை வேகமாக இயங்க வைக்க உதவுகிறது. ஒவ்வொருவருக்குமான உடல்வாகு, கருப்பையில் வளரும் குழந்தையின் நிலை என பல்வேறு வித்தியாசங்கள் இருக்கும் என்பதால் இதுபோன்ற உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி செய்யக்கூடாது.

சிறந்த நேரம்

சிறந்த நேரம்

பட்டாம்பூச்சி உடற்பயிற்சி தித்லி ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி பொதுவாக ஒரு வார்ம் அப் பயிற்சியாகத் தான் செய்யப்படுகிறது என்பதால் இந்த உடற்பயிற்சியை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பயிற்சியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் . நீங்கள் தூங்கி எழுந்த பிறகு, தூங்க செல்லும் முன், தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு என எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் செய்யலாம்.

என்ன பயன்?

என்ன பயன்?

இந்த உடற்பயிற்சியின் மிக முக்கியமான பயனாக உஙக்ள் உள் தொடைகள், இடுப்பும் தொடையும் சேருமிடம் மற்றும் இடுப்பு ஆகியவற்றை ஸ்ட்ரெட்ச் செய்கிறது.

பிரசவத்திற்கு உதவும் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான பெல்விக் பகுதியை உறுதியாக்கி பிரசவத்தை எளிமையாக்குகிறது.

வயிறு சார்ந்த உறுப்புகள், கருப்பை மற்றும் புரோஸ்டேட் சுரப்பிகளின் செயல்திறனை தூண்டுகிறது.

உடலின் சுழற்சி மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

மேலும் குடல் அசைவுகளை எளிதாக்குவதற்கும், திரவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் இது உதவுகிறது.

கால் மற்றும் அடிவயிற்று பிடிப்புகளில் இருந்து மிகச்சிறந்த தீர்வுகளை அளிக்கிறது.

வகைகள்:

பட்டாம்பூச்சி உடற்பயிற்சியில் இரண்டு வகையான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. பூரண தித்லி ஆசனம் மற்றும் அர்த்த தித்லி ஆசனம் (அரை) என இரண்டு வகைகள் இருக்கின்றன. இந்த ஆசனங்கள் நீங்கள் உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் செய்யக் கூடிய உங்கள் உடலைத் தயார்படுத்துவதற்கான ஆசனங்கள் ஆகும்.

அரை பட்டாம்பூச்சி உடற்பயிற்சி :

அரை பட்டாம்பூச்சி உடற்பயிற்சி :

அரை பட்டாம் பூச்சி உடற்பற்சி என்பது முதன் முதலாக ஆசனம் செய்ய விரும்புவோர் செய்யக் கூடிய ஆசனமாகும். இது அர்த்த தித்லி ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் இதுவரை ஆசனமே செய்தது இல்லையா? இது தான் முதல்முறையா? அல்லது உங்கள் உடல்வாகு நெளிவுத் தன்மைகளை பெறாமல் இருக்கிறதா தித்லி ஆசனத்தை செய்யும் முன் இதை செய்யுங்கள். உடற்பயிற்சியிலிருந்து தொடங்கி முழு பட்டாம்பூச்சி உடற்பயிற்சியை செய்வது நல்லது.

செய்முறை:

#1 தரையில் அமர்ந்து உங்கள் கால்களை முன்னோக்கி நேராக நீட்டவும்.

#2 உங்கள் கால்களை க்ரோயின் பகுதியை நோக்கி பாதம் மற்றும் கால்களை நகர்த்தவும்.

#3 உங்களால் முடிந்த அளவிற்கு க்ரோயின் பகுதியை நோக்கி உங்கள் கால்களை நகர்த்தவும்.

#4 உங்கள் முழங்காலை நெஞ்சை நோக்கி மெதுவாக நகர்த்தவும்.

#5 மீண்டும் தரையை நோக்கு உங்களால் முடிந்த வரை கொண்டு முழங்காலை கொண்டு செல்லவும்.

பட்டாம்பூச்சி உடற்பயிற்சி/ தித்லி ஆசனம்:

பட்டாம்பூச்சி உடற்பயிற்சி/ தித்லி ஆசனம்:

எப்படி செய்வது?

#1 தரையில் உங்கள் கால்களை நேராக முன்னோக்கி நீட்டி அமரவேண்டும். உங்கள் பின்பகுதியும் முதுகுத் தண்டும் நேராக இருக்க வேண்டும்.

#2 உங்கள் இடுப்பு (பெல்விக்) எலும்புகளை நோக்கி உங்கள் பாதம் வருமாறு முழங்கால்களை மெதுவாக மடக்க வேண்டும்.

#3 இரண்டு பாதங்களை ஒன்று சேர்க்க வேண்டும். உங்களுடைய இடுப்பு பகுதியை நோக்கி எவ்வளவு தூரம் உங்களால் கொண்டுவர முடியுமா அவ்வள்வு தூரம் கொண்டு வாருங்கள்.

#4 உங்களை ஒருபோதும் அதிக சிரமத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்

#5 உங்கள் கைகளால் இருபாதங்களையும் பிடித்து முழங்காலுக்கு எதிர்திசையில் இருக்குமாறு செய்ய வேண்டும்

#6 உங்கள் முழங்காலை மெதுவாக தரையை நோக்கி நகர்த்தவும். உங்கள் வசதிக்கு ஏற்றவாறு மட்டும் செய்யவும்.

#7 உங்கள் முழங்கால்களை மெதுவாக அமுக்கவும். ஆனால் கடுமையான திடீர் மாற்றங்களை எதையும் செய்ய வேண்டாம். தரையை தொட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எவ்வளவும் பொருமையாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பொருமையாக செய்யுங்கள்.

#8 உங்கள் முழங்களை மெதுவாக மேலே தூக்கவும்.

தவிர்க்கவேண்டியவை:

உங்களால் முடிந்தவரை எவ்வளவு மணித் துளிகள் வேண்டுமானலும் செய்யலாம். ஆனால் வலியோ அசாதரண உணர்வோ ஏற்படும் போது கண்டிப்பாக உடற்பயிற்சியை நிறுத்தி சீரிய இடைவெளியில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, July 19, 2019, 11:59 [IST]
Desktop Bottom Promotion