Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
கர்ப்பமாக இருக்கும்போது பேலியோ டயட் இருக்கலாமா? அதனால் என்ன மாதிரி பிரச்சினை வரும்?
பேலியோ டயட் பற்றியும் கர்ப்ப காலத்தில் பேலியோ டயட் கடைபிடிப்பது பற்றியும் இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை பின்பற்றுவது என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் தாய் சேய் இருவருக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியம்.

குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஊட்டச்சத்துகள் தேவைப்படுகிறது. அப்படி பார்க்கையில் கருவுற்ற பெண்கள் இந்த பேலியோ டயட் முறையை பின்பற்றுவது நல்லதா? என்பதை பற்றித்தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பேலியோ டயட் என்றால் என்ன?
நம் முன்னோர்கள் அல்லது மூதாதையர்கள் பின்பற்றிய உணவு முறை தான் இந்த பேலியோ அதாவது கேவ்மேன் டயட் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு இயற்கையான உணவு முறையாகும். பண்ணைகளில் வளர்க்கப்பட்ட அல்லது செயல்படுத்தப்பட்ட ஒன்றிலிருந்து பெறப்படுகிறது.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம்
பேலியோ கருவுற்ற காலத்தில் பின்பற்றப்படும் ஆரோக்கியமான உணவு முறையாகும். புரோட்டீன், ஆலிவ் ஆயில் அல்லது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகள் உள்ளன. இது குழந்தையின் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இரும்புச்சத்து
இரும்புச்சத்து கருவுற்ற பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அனிமியா போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இது உதவுகிறது. எனவே இந்த பேலியோ டயட் முறை மூலம் போதுமான இரும்புச்சத்தைப் பெற முடியும். இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் பிரசவத்தின் போது சிரமங்கள் ஏற்படாமல் சுகப்பிரசவம் தரிக்க பயன்படுகிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
இந்த டயட் முறையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை சேர்ப்பதால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். பீட்சா மற்றும் பர்கர் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.

பேலியோ டயட் பயன்கள்
இந்த டயட்டில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் போன்றவைகள் உள்ளன.
கர்ப்பம் தரிக்க ஏதுவான சூழலை உருவாக்கி தருகிறது. இரத்தத்தில் உள்ள ஹீமோசிஸ்டைன் அளவை குறைக்கிறது.

ஒமேகா 3
இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகிறது. பிரசவத்திற்கு முன் மற்றும் பின் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது.

ரத்த சர்க்கரை
கர்ப்ப காலத்தில் ஏற்படும் அனிமியா பற்றாக்குறையை போக்க இதில் அதிக இரும்புச் சத்து உள்ளது. பைரேட்ஸ் உற்பத்தியை தடுக்கிறது. ஏனெனில் இது இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் ஜிங்க் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும்.
இந்த டயட் குறைந்த கிளைசெமிக் குறியீட்டெண் கொண்டு இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. எனவே கர்ப்ப கால நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

அசிடிட்டி
ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து தாய்க்கும் சேய்க்கும் நன்மை அளிக்கிறது.
வாயு மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை சரி செய்து கர்ப்ப காலத்தை எளிதாக்குகிறது.

விளைவுகள்
கருவுற்ற பெண்கள் இந்த டயட் முறையில் தானியங்கள் மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பதில்லை. இந்த டயட் முறையில் மீன் மற்றும் மாமிசத்தை எடுத்து கொள்ளும் போது இறுதியில் குழந்தை பிறந்த பின்பு அதிக இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த பாலியோ டயட் முறையில் அதிக அளவில் சிவப்பு இறைச்சி எடுத்துக் கொள்ளும் போது கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்பட்டு குழந்தை குறைந்த எடையுடனும் போதுமான வளர்ச்சி இன்றியும் பிறக்க வாய்ப்புள்ளது.

பேலியோ டயட் உணவுப் பழக்கம்
இறைச்சி, மீன் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளுக்கு பதிலாக முட்டை, நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளை எடுத்து கொள்ளலாம்.
கர்ப்ப கால பெண்களுக்கு வாந்தி ஏற்படும். ஸ்டார்ச் கார்போஹைட்ரேட் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பைரேட்ஸ் குறைவான உணவான சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணிக்காய், வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
பாதாம் பால், தேங்காய் பால், முந்திரி பருப்பு பால் போன்றவற்றை பழச்சாறுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

மாற்றங்கள்
கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரோட்டீன் குறைவாகவும் எடுத்து கொள்ளுங்கள். அதிகமான புரோட்டீன் குழந்தையின் எடை குறைவாக பிறக்க வைக்கும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பெர்ரீஸ், வேர்க் கிழங்குகள் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். ஆனால் அளவு குறைப்பது நல்லது.

பாதாம் பால்
மருத்துவரை ஆலோசித்து மல்டி விட்டமின்களை எடுத்து கொள்ளுங்கள். இது உங்கள் வைட்டமின் பற்றாக்குறையை போக்கும்.
பேலியோ டயட்டில் மாட்டுப் பால் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக அதே அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி கொண்ட பாதாம் பால் பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே இந்த பேலியோ டயட் கர்ப்ப கால பெண்களுக்கு மிகவும் சிறந்த முறை. இதில் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து க்களுக்கு தகுந்த மாதிரி சில மாற்றங்கள் செய்து கூட பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications