Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...!
சுகப்பிரசவம் எப்படி நிகழும்? குழந்தை வெளி வருவதன் படி நிலைகள்!
சுகப்பிரசவம் என்பது இயற்கை பிரசவ முறை; சுகப்பிரசவம் எப்படி நிகழும்? குழந்தை வெளி வருவதன் படி நிலைகள் எனது பற்றி இங்கு படித்து அறியலாம்.
பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான விஷயம் கருத்தரிப்பு மற்றும் பிரசவம்; இந்த இரண்டில் பிரசவம் என்பது பெண்கள் மறு பிறப்பு எடுக்கும் ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. பெண்களுக்கு பிரசவம் நடக்கும் அறையில் மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமே இருப்பர்; மிக அரிதான இடங்களில் தான் பெண்ணின் கணவரை அனுமதிப்பது வழக்கம்.

பெண்கள் பிரசவ சமயத்தில் படும் வேதனையை கண்ணால் காணாததாலோ என்னவோ, பெரும்பாலான ஆண்கள் பெண்களை மதிப்பது இல்லை; பிரசவம் என்பதையும் பெரிதான விஷயமாக கருதுவது இல்லை.

பிரசவத்தின் அருமை!
இப்படிப்பட்ட ஆண்கள் பெண்களை பிள்ளை பெற்று போடும் இயந்திரம் மற்றும் சுகம் தரும் ஒரு பொருள் போன்று கருதுகின்றனர். இப்படி கருதும் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இருப்பினும் ஒரு துளி விஷம் ஒட்டுமொத்த பாலையும் விஷமாக்கி விடுவது போல, இந்த சில ஆண்கள் அனைத்து ஆண்களையும் கெடுத்து விடக்கூடாது என்னும் நோக்கத்திலும், பிரசவ அறையில் எப்படி குழந்தை பிறந்து வெளி வருகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவும் இந்த பதிப்பு வழங்கப்படுகிறது.

சுகப்பிரசவத்தின் ஆரம்பம்!
பெண்கள் தங்களது 10 மாத கர்ப்ப காலத்தின் இறுதி கட்டத்தை அடையும் பொழுது, பிரசவத்திற்கு முன்னோட்டமாக சில அறிகுறிகள் ஏற்படும்; இந்த அறிகுறிகளில் மெய்யான பிரசவ வலிக்கான அறிகுறி, பொய்யான பிரசவ வலிக்கான அறிகுறி என்று இரண்டு விஷயங்கள் உள்ளன. பொய்யான பிரசவ வலி என்றால், சிறிது நேரம் ஏற்பட்டு விட்டு மறைந்து விடும்.

உண்மையான பிரசவ வலி!
உண்மையான பிரசவ வலி ஏற்படும் பொழுது, அதன் முதல் படியாக பெண்களுக்கு மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்; சில பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறாக எளிதாக மூச்சு விட முடியும். இந்த அறிகுறி வெளிப்பட்ட கொஞ்ச நேரத்தில், பெண்ணின் பிறப்புறுப்பில் பிரௌன் நிறத்தில் இரத்தக்கட்டிகள் வெளிப்பட தொடங்கும். இந்த இரண்டு அறிகுறிகள் அடுத்தடுத்து ஏற்பட்டாலே, பிரசவம் நிகழ போகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

உச்ச கட்டம்!
வலியின் உச்ச கட்டமாக வயிற்றுப்போக்கு, தீவிர முதுகு வலி போன்ற கோளாறுகள் உடம்பில் ஏற்பட துவங்கும். இந்த நேரத்தில் மருத்துவமனையில் கர்ப்பிணியை சேர்த்து விடுதல் நல்லது. இதனை அடுத்த நிலையாக பெண்களின் கருவறையில் இருக்கும் பனிக்குடம் உடைந்து பனிக்குட நீர் வெளிப்பட துவங்கலாம்; மேலும் குழந்தை வெளியேறுவதற்கு ஆயத்தமாகும் சூழல் இருப்பதால், வயிற்றில் மற்றும் பிறப்புறுப்பில் வலி மற்றும் பிடித்து விடுவது போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.

வலியின் தீவிரம்!
இந்த அறிகுறிகளுக்கு பின் கட்டாயம் பிரசவம் நிகழ்ந்தே தீரும். இந்த அறிகுறிகள் பெண்ணின் உடலில் ஏற்பட்டு விட்டால், பின்பு வலி உச்சத்தின் உச்சத்தை அடைந்து பெண்களை பாடாய் படுத்தும். அந்நிலையில் குழந்தை வெளியே வருவதற்கு ஏற்ற வகையில் எலும்புகள் விரிவடைய மற்றும் பிறப்புறுப்பு கிழிய தயார் ஆகும். இந்த வலி மற்றும் உணர்வுகளை மறந்து பெண்கள் இருக்க, பக்கத்தில் இருப்பவர்களுடன் பேச முயலலாம்; தனது எண்ணங்களை வலியில் இருந்து திசை திருப்ப முயலலாம்.
மிகவும் சோர்வு ஏற்படும் தருணம் இது; ஆகையால், எதாவது உண்ண வேண்டும் என்று தோன்றினால், கொஞ்சமாக சாப்பிட்டு கொள்வது கூட நல்லது.

பிறப்புறுப்பு கிழிதல்!
வலியின் அடுத்த கட்டமாக பெண்களுக்கு மரண வலி என்றால் என்ன என்பதை காட்டும் தருணம் வரும்; அது தான் பிறப்புறுப்பு கிழிக்கப்படுதல். இந்த பிறப்புறுப்பு கிழிக்கப்படுதல் தானாக, குழந்தை வெளியே வருவதை பொறுத்து மெது மெதுவாக நிகழும்; இந்த ஆரம்ப நிலையில் பெண்ணின் பிறப்புறுப்பு 3 முதல் 5 சென்டி மீட்டர் வரை கிழியும். இந்த சமயத்தில் பெண்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்; மலம் கழிக்க வேண்டும் போன்று உணர்வு ஏற்படலாம்.
இந்த உணர்வு எல்லை மீறுவது போல தோன்றினால், உடனே கழிப்பறைக்கு சென்று சிறுநீர் அல்லது மலம் கழித்து விட்டு திரும்பலாம்; இதற்கு மருத்துவர் கண்டிப்பாக ஆலோசனையும், உதவியும் புரிவார்.

அழுத்தம் கொடுத்தல்!
குழந்தை பெற்றோரை காண ஆசை கொண்டு, கருவறை வாசத்தை முடித்துக் கொண்டு வெளிப்படும் பொழுது, அதாவது குழந்தையின் தலை பிறப்புறுப்பை லேசாக கிழிக்க தொடங்கிய பின், பெண்களை வயிற்றின் மீது அழுத்தம் கொடுத்து குழந்தையை வெளியே ஏற்ற முயலுமாறு மருத்துவர் அறிவுறுத்துவார்.

மருத்துவ முறைகள்!
இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்படும் பொழுது பெண்ணின் பிறப்புறுப்பு 8 முதல் 10 சென்டி மீட்டர் கிழிபடும்; இந்நிலையில் தாயின் பிறப்புறுப்பை விட்டு, குழந்தை வேகமாக வெளியே தலையை விட்டு விட்டால், பிரச்சனை இல்லை; வேகமாக குழந்தையை வெளியே எடுத்து விடலாம். அழுத்தம் கொடுக்கும் பொழுதே மயங்கி போய் விடும் தாய்மார்களுக்கு உதவ என பல மருத்துவ முறைகள் உள்ளன; அவற்றை பயன்படுத்தி குழந்தையை வெளியேற்றி விடலாம்.

நஞ்சுக்கொடி!
குழந்தையை வெளியே எடுத்து, சிறிது நேரத்திற்கு பின் தாயையும், சேயையும் சேர்த்து வைத்து இருக்கும் தொப்புள் கொடி அறுக்கப்படும். பின் குழந்தையை தனித்து எடுத்து சென்று சுத்தம் செய்வார்; அதே நேரத்தில், தாயின் உடலில் இருந்து தண்ணீர் நிரம்பிய நஞ்சுக்கொடி வெளியே பிரித்து எடுக்கப்படும். பின் வெளிப்பட்ட தொப்புள் கொடியை சரி செய்து, தாயின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட கிழிசலுக்கு தையல் போடப்படும்.

தாய்ப்பால்!
இந்த வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கும் பொழுது, உடல் சுரப்பிகள் தனது வேலையை காட்ட தொடங்கி விடும். தாய்க்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான வேலைகளை ஜரரூராக தொடங்கி விட்ட பின், மிக முக்கிய விஷயமான தாய்ப்பால் சுரப்பையும் பெண்ணின் உடல் தொடங்கி வைக்க ஆரம்பித்து விடும்.
எப்பொழுது தாயின் மேல் குழந்தையின் ஸ்பரிசம் படுகிறதோ, அப்பொழுது தாய்ப்பால் சுரப்பு கொப்புளித்து கொண்டு, குழந்தையை தேடி வெளிவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications











