For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“நான் அலுவலகத்தில் இருக்கும் பொழுதே என் பனிக்குடம் உடைந்து விட்டது” - போராட்ட பிரசவம்!

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான காலகட்டம் ஆகும்; இந்த பதிப்பில் அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே பனிக்குடம் உடைந்து குழந்தையை பிரசவித்த பெண்ணின் கதை

|

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான காலகட்டம் ஆகும்; கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின் இறுதி கட்ட நாட்களை நெருங்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி கவனமாக அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இல்லாமல் இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இப்பொழுது கர்ப்பத்தின் இறுதி கட்டத்தில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்ட பெண்ணிற்கு நடந்த பிரசவ அனுபவத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்! இந்த பதிப்பில் அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே பனிக்குடம் உடைந்து குழந்தையை பிரசவித்த பெண்ணின் கதை - போராட்ட பிரசவ அனுபவம் பற்றி பார்க்கலாம்.

Real Life Story: Her Water Broke During Office Hours

பதிப்பு நிஜத்தில் நடந்த உண்மை கதையை பிரதிபலிப்பதால், பெயர்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கருதி கற்பனையாக புனையப்பட்டு உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்ப காலம்!

கர்ப்ப காலம்!

ராணி (கற்பனைக்கு கொடுக்கப்பட்ட பெயர்) என்னும் பெண் கர்ப்பம் தரித்து இருந்தாள்; இப்பொழுது தனது கர்ப்பத்தின் கடைசி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறாள். இந்த பெண்மணி நன்கு படித்த பெண்மணி; ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் வேலை பார்த்து வரும் நபர். இவரின் கணவரும் வேறொரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுடைய பெற்றோர்கள் அதாவது தம்பதியர் இருவரின் பெற்றோர்களும் வேறு ஊர்களில் - கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

வழக்கம் போல்..

வழக்கம் போல்..

ராணி என்ன தான் கர்ப்பத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருந்தாலும் வேலைக்கு செல்வதை நிறுத்தவில்லை; பிரசவ வலி வந்தால் அல்லது வருவது போல் இருந்தால் அப்பொழுது விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று கருதி, தினசரி வழக்கமாக அலுவலகம் சென்று வருவது போல் அன்றும் சென்றுவிட்டார். இவர்களின் அலுவலகம் காலை 9 மணி அளவில் தொடங்கி மாலை 7 மணி வரை இருக்கும்.

கணவர் அறிவுரை!

கணவர் அறிவுரை!

ராணியின் கணவர், தான் அலுவலகத்தில் ஒரு முக்கிய வேளையில் ஈடுபட்டு உள்ளதால், தான் இரவு வீடு திரும்ப நேரம் ஆகலாம். கிராமத்தில் வாழும் பெற்றோரால் நகர வாழ்க்கையை வாழ்வது கடினம்; நீயோ நானோ வீட்டில் இருந்தால் அவர்களுக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும். ஆகையால், நீ விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தால் உன்னை என் பெற்றோர் அல்லது உனது பெற்றோர் வந்து பார்த்துக் கொள்வார்கள்.

பிரசவ நேரம் நெருங்குகிறது, அலுவலகத்திற்கு விடுப்பு கொடுத்து விடு என்று கூறினார்! ஆனால் ராணி அதை மறுத்து விட்டார்.

மறுப்பிற்கான காரணம்!

மறுப்பிற்கான காரணம்!

ராணி பிள்ளை பெற்ற பின் விடுப்பு எடுத்து கொண்டால், குழந்தையை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும்; குழந்தை பிறந்த பின் மேலும் ஒரு மாதம் அல்லது மேலும் சில நாட்கள் குழந்தையுடன் இருக்கும் வாய்ப்பு, குழந்தையை கூடவே இருந்து கவனித்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்ற காரணத்தை கணவருக்கு கூறி அவர் கூறிய அறிவுரையை மறுத்து விட்டார்.!

மேலும் படிக்க: ஆண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

எதிர்பாராத நிகழ்வு!

எதிர்பாராத நிகழ்வு!

கணவருடன் மேற்கண்ட விவாதங்களை முடித்த பின் தம்பதியர் ஒருமனதாக ராணி அலுவலகம் போகலாம்; ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே போன் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர். அதன் பின் தங்கள் தினசரி வேலைகளை தொடர்ந்தனர். ராணி அலுவலத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த சமயம் பிறப்புறுப்பில் மாதவிடாய் நாட்களின் பொழுது ஏற்படும் அசௌகரிய உணர்வை போன்ற ஒரு உணர்வை அனுபவித்தார்.

அந்த உணர்வின் காரணம் என்ன? ஒருவேளை மாதவிடாயாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கழிவறைக்கு சோதிக்க சென்றார்.!

பனிக்குடம் உடைந்து விட்டது!

பனிக்குடம் உடைந்து விட்டது!

அங்கு கழிப்பறை சென்று பார்த்தால், பிறப்புறுப்பில் இருந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்தது; ராணி ஏற்கனவே கர்ப்ப காலம் மற்றும் பிரசவ வலி, பிரசவ நேரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று படித்து அறிந்து இருந்ததனால், உடனே அறிந்து கொண்டார். இந்த நீர் பனிக்குடம் உடைந்து வெளியேறுவதாக தான் இருக்க வேண்டும் என்பதனை!

ஏனெனில் வழக்கத்தை விட அதிகமான அளவில் நீர் வெளியேறுவது சந்தேகத்திற்கு இடம் இன்றி, அது பனிக்குட நீர் தான் என்பதை உணர்த்தியது!

தகவல் தெரிவித்தார்!

தகவல் தெரிவித்தார்!

தன் நிலையை அறிந்து கொண்ட ராணி தான் உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்; இல்லை எனில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று முடிவு செய்து அலுவலகத்தில் சொல்லிக்கொண்டு, அலுவலக நண்பர்களின் சிலரை உதவிக்கு அழைத்து, வண்டியை அமர்த்தி கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்; பயண நேரத்தில் கணவருக்கும் தனது பெற்றோருக்கும், மாமியார் மாமனாருக்கும் தகவல் தெரிவித்தார்; மருத்துவமனை விலாசத்தை அளித்தார்.

மேலும் படிக்க: ஆஃபீஸில் சுய இன்பம் காண #Masturbation ப்ரேக் எடுத்து வந்த பெண்மணி!

மருத்துவ பரிசோதனை!

மருத்துவ பரிசோதனை!

மருத்துவமனையை அடைந்ததும் மருத்துவரை அழைத்து தனது நிலையை விளக்கி உடனடியாக அறுவை சிகிச்சை அறைக்கு சென்று அட்மிட் ஆனார் ராணி. மருத்துவர்களும் ராணியின் உடலை சோதித்து குழந்தை இன்று இரவே பிறந்து விடும் அல்லது நாளை காலை ஆகலாம் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார்கள். வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை நல்ல படியாக இருக்கும் வண்ணம் கவனித்து பரிசோதனை அளித்து வந்தனர்.

ராணிக்கு பிரசவ வலி தொடங்கி விட்டது; சரியாக அந்த சமயத்தில் ராணியின் கணவர் வந்து சேர்ந்தார்.

பிரசவம் முடிந்தது!

பிரசவம் முடிந்தது!

பிரசவ வலி உச்ச கட்டத்தை அடைந்த பொழுது மருத்துவர்கள் சரியான முரையில் சிகிச்சை அளித்து ராணியையும் குழந்தையையும் நல்ல முறையில் காப்பாற்றினார்கள்! மருத்துவர்கள் ராணியை பெரிதும் பாராட்டினார்கள்; ஏனெனில் பனிக்குட நீர் உடைந்ததை கண்டு கொண்டு விரைவில் தனியாக மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆகி குழந்தையை காப்பாற்றி இருக்கிறார்.

இது போன்று எல்லா பெண்களும் தங்கள் கர்ப்ப காலத்தினை பற்றி அறிந்து இருக்க வேண்டும்!

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

பனிக்குட நீர் உடைந்தால் அதன் இந்த என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு பெண்களிடத்தில் இருக்க வேண்டும்; இந்த தெளிவு இல்லாமல் பல பெண்கள் தங்கள் குழந்தையை இழந்து இருக்கிறார்கள்; பலர் குழந்தையுடன் தங்கள் உயிரையும் சேர்த்து இழந்து இருக்கிறார்கள்.

ஆகையால் பனிக்குடம் உடைந்தது தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்; பிரசவம் நெருங்கும் சமயத்தில் அதிக கவனத்துடன் இருந்து உடலின் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனிக்க வேண்டும். பல கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களின் உறவுகள் விழிப்புணர்வு அடைய ராணியின் இந்த போராட்ட பிரசவ அனுபவத்தை பரப்புங்கள் நண்பர்களே!

மேலும் படிக்க: மனைவி ஏமாற்றியதை அறிந்தும் 35 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வருகிறேன் - My Story #314

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Her Water Broke During Office Hours

Real Life Story: Her Water Broke During Office Hours
Desktop Bottom Promotion