பிரசவத்தில், குழந்தையின் பெரிய தலை பெண்ணின் சிறு பிறப்புறுப்பு துளை வழியே எப்படி வெளிவருகிறது?

பிரசவம் என்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்; அதிலும் ஆண் மற்றும் பெண்ணின் இரண்டு மிகச்சிறிய விந்து மற்றும் அண்ட செல்கள் எப்படி ஒரு முழு உருவமாக, குழந்தையாக வளர்ந்து வடிவமெடுக்கிறது என்று யோசித்து பா

பிரசவம் என்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்; அதிலும் ஆண் மற்றும் பெண்ணின் இரண்டு மிகச்சிறிய விந்து மற்றும் அண்ட செல்கள் எப்படி ஒரு முழு உருவமாக, குழந்தையாக வளர்ந்து வடிவமெடுக்கிறது என்று யோசித்து பார்த்தால், அதிசயத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவோம்! தீராத வியப்பு மற்றும் இயற்கையின் அமைப்பு நம்மை மேலும் மேலும் வியக்க வைக்கும். சரி அறிவியல் மற்றும் மரபு வழியால், குழந்தை உண்டாவதாக வைத்துக் கொண்டாலும், அக்குழந்தை வெளியே வரும் பொழுது தாயின் இடுப்பெலும்பு பிளக்கிறது, பிறப்புறுப்பு கிழிகிறது

How childbirth is happening and interesting facts about delivery

- இத்தனை வலிகளுக்கு பின்னும் எப்படி அப்பெண் உயிர் வாழ்கிறாள்; பிரசவத்தைக் கடந்தும் உயிர்வாழும் பெண்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது அத்துணை சக்தி!? இவற்றையெல்லாம் குறித்து சிந்தித்து பார்த்தால், விடையாக மிஞ்சுவது ஆச்சரியம் மட்டுமே! இந்த பதிப்பில் பல ஆச்சரியமான நிகழ்வுகளுக்கான காரண காரியங்களை குறித்தே படித்தறிய போகிறோம்! வாருங்கள் நேரத்தை விரயம் செய்யாமல் பதிப்பிற்குள் செல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி தலை வெளிவருகிறது?

எப்படி தலை வெளிவருகிறது?

பிரசவத்தின் பொழுது 2-4 கிலோ எடை கொண்ட குழந்தை எப்படி தாயின் சிறு பிறப்புறுப்பு துளை வழியே வெளிவருகிறது என்று சிந்தித்து பாருங்கள்! வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம் இந்த ஆச்சரியத்தில் ஒளிந்துள்ள அறிவியல் உண்மையை இங்கு படித்தறியுங்கள்! அதாவது குழந்தை தாயின் வயிற்றில் உண்டான நிமிடம் முதல் அது வெளிவரும் தருணம் வரை குழந்தையின் தலை மற்றும் உடல் அதிக மிருதுத்தன்மை கொண்டிருக்கும். குழந்தையின் உறுப்புகள் அனைத்துமே அவர்கள் பிறக்கும் பொழுது வளர்ச்சித் தன்மையில், மீள்தன்மை அதாவது பிளேக்சிபிளாக இருக்கும். மேலும் குழந்தை கருவறையில் பனிக்குட நீரில் இருப்பதால், அதன் உடல் முழுதும் ஒருவித வழவழப்பு தன்மை கொண்டிருக்கும்.

குழந்தைகளின் உடல் மற்றும் தலை இந்த தன்மைகளை கொண்டுள்ளதால் தான் தாயின் பிறப்புறுப்பில் சற்று தளர்ந்து, குறுகி எளிதாக வழுக்கிக் கொண்டு வெளிவருகிறது. பிறந்த பின், வளர வளர அதாவது முதல் 3 மாத காலத்திற்குள் குழந்தையின் தலை மற்றும் உடல் சரியான நிலைத்தன்மையை பெற்றுவிடும்.

எப்படி மூச்சுவிடும்?

எப்படி மூச்சுவிடும்?

குழந்தைகள் கருவறையில் எப்படி மூச்சு விடுகின்றன என்பது ஆச்சரியத்தின் அடுத்த கட்டம். அதிலும் கருவறையில் ஆக்சிஜன் கிடைக்காது என்ற உண்மையை அறிந்தால், உங்கள் ஆச்சரியம் பன்மடங்காகிவிடும். கருவறையில் உள்ள குழந்தை தாயிடமிருந்து ஆக்சிஜனை பெறுகிறது. தாயின் உடலில் இருந்து நஞ்சுக்கொடி மூலமாக கருவானது ஆக்சிஜனை பெறும்; குழந்தை பிறந்த பின் தாயோடு இணைத்து வைத்திருந்த தொப்புள்கொடி வெட்டப்படுகிறது, ஆனால் இந்த நஞ்சுக்கொடி என்ன ஆகும் என்ற சந்தேகம் தோண்றுகிறதல்லவா? பிரசவ சமயம் நஞ்சுக்கொடி குழந்தையின் நுரையீரலில் திரவமாக சேர்கிறது; பிரசவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது குழந்தை சுவாசிக்க இது உதவும். குழந்தை பிறக்கும் பொழுது சரியாக இந்த திரவம் தீர்ந்து குழந்தையின் உடலில் சாதாரணமாக கலந்து, குழந்தையின் நுரையீரல் காற்றை சுவாசிக்க ஆயத்தமாகிவிடும்.

பாருங்கள் இயற்கை மனிதன் மற்றும் உயிரினங்களின் பிறப்பினில் ஒளித்து வைத்திருக்கும் அதிசயத்தை.. உங்கள் மெய் சிலிர்க்கவில்லையா?

குழந்தையின் உடல் வெப்பநிலை

குழந்தையின் உடல் வெப்பநிலை

98 டிகிரி வெப்பநிலை கொண்ட பெண்ணின் உடலில் இருந்து 70 டிகிரி மட்டுமே வெப்பம் கொண்ட அறையில் பிரவேசிக்கும் பொழுது, குழந்தையின் உடலில் வெப்பநிலை மாறாமல் சரியாக இருக்கிறது. இது எப்படி என்று அறிவீரா? இதற்கு காரணம் குழந்தையின் உடலில் உள்ள தைராயிடு சுரப்பி தான். உடலின் அட்ரிலின் சுரப்பை குறைத்து, குழந்தையின் உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதில் தைராயிடு சுரப்பி பெரும்பங்கு வகிக்கிறது.

குழந்தைக்கு வலிக்குமா?

குழந்தைக்கு வலிக்குமா?

குழந்தைக்கு வலி ஏற்பட்டாலும் அதை குழந்தையால் சொல்ல முடியாத நிலையில் சிசு உள்ளதால், மருத்துவர்கள் இந்த கேள்விக்கு பின்வருமாறு விடை அளிக்கின்றனர். அதாவது, குழந்தை தாயின் பிறப்புறுப்பு துளை வழியாக வெளியே வரும் பொழுது, உடலை குறுகி, தலையை சிறுத்து உடலை துளைக்கு தகுந்தவாறு ஒத்துழைத்தால் மட்டுமே வெளிவர இயலும்; அப்படிப்பட்ட அந்த நிலையில், உடலை அதிகம் குறுக்கி, சுருக்க வேண்டிய தருணத்தில், குழந்தையின் உடலில் வலி ஏற்படலாம்; ஆனால், சதை கிழியும் பெண்ணின் வலிக்கு முன் சந்தில் சிக்கிய குழந்தையின் வலி அத்துணை கடினமாக பெரிதாக இருக்காது.

குழந்தை பிரசவத்தை பார்க்குமா?

குழந்தை பிரசவத்தை பார்க்குமா?

குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன பின்பு தான் குழந்தையின் கண் பார்வை முழுமையான வளர்ச்சியை அடையும். மேலும் குழந்தையின் கண்கள் மெதுவான வளர்ச்சி தன்மை கொண்டவை. குழந்தை கருவறையில் இருக்கும் பொழுதே தாய் மற்றும் தந்தை, உறவுகளின் பேச்சைக் கேட்பதால், பிரவத்தின் பொழுது நடக்கும் உரையாடல்கள் மற்றும் சம்பாஷணைகள் குழந்தையின் காதில் விழும்; குழந்தையால் அவற்றை தெளிவாக கேட்க இயலும். ஆனால், பிரசவத்தில் சிக்கல் இருந்தால், அப்பொழுது குழந்தையினால் அத்துணை தெளிவாக பேச்சுக்களை கேட்க இயலாது.

எப்படி வெளிப்படும்?

எப்படி வெளிப்படும்?

பிரசவத்தின் பொழுது குழந்தை கருவறையில் இருந்து, திருகாணியை திருகுவது போல, சுழன்று சுழன்று - உடலை சுழற்றி சுழற்றி வெளியே வரும். அதுவும் பெண்ணின் பிறப்புறுப்பு துளையிலிருந்து முதலில் வெளிப்படும் குழந்தையின் உடல் பாகம் தலை தான். குழந்தையை தன் தலையால் பிறப்புறுப்பு துளையை அழுத்தும்; இந்த அழுத்தம் காரணமாக துளை விரிவடைந்து குழந்தையின் தலை முதலில் வெளிப்படும். கடின பக்கமான தலையே வெளியே வந்தபின், மற்ற பாகங்களை விரைவாக, பிரச்சனையின்றி வெளியே எடுத்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, July 31, 2018, 18:00 [IST]
Desktop Bottom Promotion