Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்..
Planetary Alignment 2026: நாம் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதி முடிந்து, இரண்டாம் பாதியில் நுழையவுள்ளோம். இந்த இரண்டாம் பாதியில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக நீதிமான் சனி பகவான் ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார்.

அதோடு குரு பகவான் தனது இயல்பான இயக்கத்திலிருந்து விலகி, தீவிர நிலையில் நகரத் தொடங்கி, நற்பலன்களை அளிப்பதற்கு பதிலாக, வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் ஆண்டின் இறுதியில் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியும் நடக்கவுள்ளன.
இப்படி மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய கிரகங்களின் நிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதால், 2026 ஆம் ஆண்டின் அடுத்த 6 மாத காலம் 3 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கவுள்ளனர். இப்போது எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் அடுத்த 6 மாத காலங்கள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வேலை பறிபோகலாம் மற்றும் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டின் அடுத்து வரும் மாதங்களில் ஒவ்வொரு வேலையையும் கவனமாக செய்ய வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் இழப்புக்களை ஏற்படுத்தும். எந்த ஒரு முடிவையும் நன்கு சிந்தித்து எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப பொறுப்புக்களை புறக்கணிப்பது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி சில சவால்களைக் கொண்டு வரும். நீண்ட காலமாக நடந்து வந்த வேலைகள் திடீரென்று நின்றுவிடலாம். வேலை மற்றும் தொழிலில் ஏற்படும் கவனச்சிதறல்களால் உங்களின் வேலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கிடைக்கும். இருந்தாலும், பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களை அதிகம் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். வணிகர்களுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



