வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..!

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

Weekly Horoscope For 28 June 2026 To 04 July 2026 In Tamil

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 ஜூன் 28 ஆம் தேதி முதல் 2026 ஜூலை 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பண வரவு அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த வாரத்தில் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் சற்று பரபரப்பாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இந்த வாரத்தில் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மொத்தத்தில் இந்த வாரத்தில் பண வரவு அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பேச்சுத் திறனால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேலும் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இனிமையாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். இந்த வாரத்தில் எந்த ஒரு ஆதாயமும் கிடைக்காது, இழப்பும் ஏற்படாது. ஆனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தன்னம்பிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, பாராட்டப்படுவதோடு, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு செழிப்பாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள். வார தொடக்கத்திலேயே அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். இருப்பினும், இந்த வாரம் மாணவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். காதல் உறவில் பரஸ்பர நம்பிக்கையும் நெருக்கமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல ஆதாயமும் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாரம் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதன் விளைவாக பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுமாராக இருக்கும். சிறு வேலைகளுக்காக கூட அவசரப்பட்டு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எந்தவொரு உடல்நலப் பிரச்சினையையும் புறக்கணிக்காதீர்கள், இல்லையெனில் பெரிய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பணியிடத்திலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ, உங்கள் மறைமுக எதிரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். நிதிப் பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் யாருக்கும் பணம் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, June 27, 2026, 23:28 [IST]
Desktop Bottom Promotion