Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா?

Actor And Director Bhagyaraj Death: தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் அவர்கள் இன்று காலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். 73 வயதான பாக்யராஜ் அவர்கள் 1953 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் இவர் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் சிறந்த நடிகராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்தார்.

Actor And Director Bhagyaraj Death Can Walking Trigger a Heart Attack

இப்படிப்பட்ட பாக்யராஜ் அவர்கள் இன்று காலை தனது மனைவி பூர்ணிமாவுடன் எப்போதும் போல் வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே வழியில் சுயநினைவை இழந்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை கேட்கும் போது நிச்சயம் அனைவருக்கும் "வாக்கிங் சென்றால் மாரடைப்பு ஏற்படுமா?" என்றே கேள்வி எழக்கூடும். இப்போது இதுக்குறித்து சற்று விரிவாக காண்போம்.

முதலில் ஒரு விஷயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அதுவும் ஏற்கனவே இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது கண்டறியப்படாத இதய பிரச்சினை உள்ளவர்கள், அதிக தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அது மாரடைப்பைத் தூண்டக்கூடும்.

வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா?

பொதுவாக சாதாரண வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்தாது. மாறாக, தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செய்வது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பு அளவைக் குறைக்கவும், உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. இவையெல்லாம் கண்ட்ரோலாக இருந்தால், மாரடைப்பின் அபாயம் குறையும்.

ஆனால் எப்போது ஒருவர் நீண்ட காலமாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்து, திடீரென்று அதிக வேகத்தில் ரன்னிங் அல்லது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, இதயத்தின் மீது அதிக அழுத்தம் ஏற்படலாம். இந்நிலையில் ஏற்கனவே இதய தமனிகளில் அடைப்பு இருந்தால், இந்த கூடுதல் அழுத்தம் மாரடைப்பைத் தூண்டக்கூடும்.

உடற்பயிற்சி ஏன் சில நேரங்களில் மாரடைப்பைத் தூண்டுகிறது?

பொதுவாக மாரடைப்பானது இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது உண்டாகிறது. இந்த அடைப்பு சில சமயங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, இதயம் அதிகமாக வேலை செய்வதால், இதயத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தின் தேவை அதிகரிக்கிறது.

இந்நிலையில் தமனிகளில் கொழுப்புக்கள் படிந்திருந்தால் அவை கிழிந்து, அவ்விடத்தில் இரத்த உறைவு ஏற்படலாம், இரத்த ஓட்டம் தடைபடலாம். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படலாம். எனவே எப்போதும் உடற்பயிற்சியானது நேரடியாக மாரடைப்பை ஏற்படுத்துவதில்லை. ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்தால், அதைத் தான் வெளிக்கொண்டு வரும்.

யாருக்கெல்லாம் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படலாம்?

பின்வரும் காரணிகள் கொண்டவர்களுக்கு உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளன. அவையாவன:

* உயர் இரத்த அழுத்தம்
* நீரிழிவு நோய்
* அதிக கொலஸ்ட்ரால்
* உடல் பருமன்
* புகைப்பிடிக்கும் பழக்கம்
* குடும்பத்தில் இதய நோய் வரலாறு
* 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்
* நீண்ட காலமாக உடற்பயிற்சி செய்யாதவர்கள்

மேலே கொடுக்கப்பட்டவர்கள் புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion