Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க..
Skin Care Tips In Tamil: தற்போது சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க அழகு நிலையங்களுக்கு செல்லும் அளவில் நேரம் கிடைப்பதில்லை. இந்நிலையில் நம் சரும அழகை மேம்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும் ஏராளமான பொருட்கள் நம் வீட்டு சமையலறையில் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அதுவும் சோள மாவு கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடும் போது, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள முதுமைக் கோடுகள், சரும சுருக்கங்கள் போன்றவை தடுக்கப்படும். அதுமட்டுமின்றி, இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை உறிஞ்சி, சரும கருமையைப் போக்கி, சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். இப்போது பொலிவான சருமத்தைப் பெற உதவும் சில சோள மாவு ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* பின் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* சிறந்த பலனைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்துங்கள்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 3 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* முக்கியமாக தவறாமல் முகத்தை துடைத்த பின் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* சிறந்த பலனைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்துங்கள்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் காபி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
