Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
கர்ப்பகாலத்தில் பாதுகாப்பாய் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்
கர்ப்பகாலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் என்பது அம்மா சாப்பிடும் உணவுகளை பொறுத்தது. எனவே குழந்தை ஆரோக்கியமாய் இருக்க அம்மாக்கள் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பகாலம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் மிகமுக்கியமான காலகட்டமாகும். ஏனெனில் அந்த சமயத்தில் பெண்கள் தனக்கு மட்டுமின்றி வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து
சாப்பிடவேண்டும். அவர்களுக்கும் சேர்த்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என அனைத்தையும் செய்யவேண்டும். அவ்வாறு இருக்கும்போது குழந்தையின் ஆரோக்கியத்தில் அம்மாக்கள் உண்ணும் உணவும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

கர்ப்பகாலத்தில் உங்களுக்கு மற்ற நாட்களை விட அதிகமாக பசிக்கும். வழக்கமான நாட்களை விட கர்ப்பகாலத்தில் கூடுதலாக 250 முதல் 300 கலோரிகள் தேவைப்படும். இந்த சூழ்நிலையில் அதிக உணவை காட்டிலும் ஆரோக்கிய உணவே சிறந்தது. கர்ப்பகாலத்தில் நீங்கள் உண்ணும் உணவு உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். எனவே கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

வேகாத இறைச்சி
சரியாக வேகாத இறைச்சி உண்பது பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் மூலம் தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இந்த உணவுகளின் மூலம் டோக்சோபிலாமா,
லிஸ்டீரியா, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் எளிதாக தாக்கக்கூடும். இவை மூலம் நரம்பு மண்டல கோளாறுகள், பார்வைக்கோளாறுகள் மற்றும் வலிப்பு போன்ற நோய்கள் குழந்தைக்கு ஏற்படலாம்.

காஃபின்
காஃபின் என்பது உலகில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இது தேநீர், காபி மற்றும் குளிர்பானங்களில் அதிகம் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் காஃபின் அளவை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் அதாவது ஒரு நாளைக்கு 1-2 கப் காபி குடித்தால் போதுமானது. காஃபின் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு, நஞ்சுக்கொடி மற்றும் கருப்பைக்கு எளிதில் செல்கிறது. வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிகளவு காஃபினை தாங்கிகொள்ளும் சக்தி இருக்காது. கர்ப்பகாலத்தின் போது அதிகளவு காஃபின் உட்கொள்வது குழந்தை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு குழந்தை எடை குறைவாக பிறக்கவும் வழிவகுக்கும்.

ஆல்கஹால்
கர்ப்பிணி பெண்கள் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். இது கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். குறைந்த அளவாய் இருந்தாலும் அது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். அதுமட்டுமின்றி மூளைக்கோளாறுகள், இதய பிரச்சினைகளும் ஏற்படலாம்.

பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பழச்சாறு
பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பழச்சாறுகளில் கேடுவிளைவிக்க கூடிய லிஸ்டீரியா, கேம்பிலோபேக்டர் போன்ற பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். இவை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிப்பதோடு கருச்சிதைவிற்கும் வழிவகுக்கும்.

பிரட் மற்றும் சாதம்:
பிரட் மற்றும் சாதம் சாப்பிடுவதால், இவை உங்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். இதிலுள்ள கொழுப்புகள் குழந்தை வளர வளர அவர்களின் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே அதே அளவு கலோரிகள் உள்ள ஆரோக்கியமான வேறு உணவுகளை நீங்கள் சாப்பிட்டால், குழந்தைக்கு பிறக்கும் போது குறைந்த அளவு கொழுப்பே இருக்கும். எனவே, இந்த உணவுகளை தவிர்த்து முழு கோதுமை பிரட், பழுப்பு அரிசி சாதம், ஓட்ஸ் ஆகியவற்றை சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
