Latest Updates
-
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம்
கர்ப்பகாலத்தில் பெண்கள் விரதமிருப்பது நல்லதா?
ஆடிமாதம், ரம்ஜான், வரலக்ஷ்மி விரதம் போன்ற சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் விரதமிருக்க நேரிடலாம். ஆனால் கர்ப்பகாலத்தில் பெண்கள் விரதமிருப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வி அ
ஆடிமாதம், ரமலான், சிவராத்திரி என பல விசேஷங்களுக்கு விரதம் இருப்பது நமது பண்பாட்டில் பழங்காலம் முதலே இருக்கும் ஒரு பழக்கமாகும். விரதம் இருப்பது அறிவியல்ரீதியாக நல்லதுதான், ஆனால் இது சாதாரண நாட்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். கர்ப்பமாய் இருக்கும்போது விரதம் இருப்பதற்கு முன் பெண்கள் யோசித்து செயல்பட வேண்டும். ஏனெனில் கர்ப்பகாலத்தில் விரதமிருப்பது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கலாம்.
கர்ப்பகாலத்தில் விரதமிருப்பது குழந்தைகளை பாதிக்குமா என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. ஆய்வுகளின்படி கர்ப்பகாலத்தில் விரதமிருப்பது குழந்தைகளின் எதிர்காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.இங்கே கர்ப்பகாலத்தில் விரதம் இருப்பது உங்களையும் உங்கள் குழந்தையையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை பார்க்கலாம்.

குறைவான எடை
நன்கு ஊட்டச்சத்துக்கள் உடைய உணவை சாப்பிடும் பெண்களுக்கே சிலசமயம் எடைகுறைவான குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த சூழ்நிலையில் விரதம் இருக்கும் பெண்களுக்கு இந்த வாய்ப்பு அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி குழந்தைகளின் உறுப்பு வளர்ச்சியிலும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணம் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காததே. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இது குழந்தைகளுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

அறிவாற்றல் குறைபாடு
கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு கார்டிசோல் ஹார்மோன்களின் அளவை உயர்த்தும், இது குழந்தையின் மூளைவளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மந்தம், நியாபக மறதி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ரமலான் காலத்தில் விரதம் இருக்கலாமா?
இஸ்லாமிய பெண்கள் ரமலான் காலத்தில் விரதம் இருப்பதை தவிர்க்க முயலுவது நல்லது. இது குழந்தையின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அதுவும் கோடைகாலத்தில் ரமலான் வரும்போது உணவும், நீரும் இன்றி இருப்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதுகாப்பல்ல. இஸ்லாமிய விதிமுறைகளும் கர்ப்பிணி பெண்களுக்கு விரதமிருப்பதிலிருந்து விலக்களித்துள்ளது. ஏனெனில் கருணை கடவுள் அல்லாஹ் குழந்தையின் ஆரோக்கியம் கெடுவதை விரும்பமாட்டார். அதற்கு பதிலாக பிறருக்கு உணவளித்தல், தானம் வழங்குதல் போன்ற நற்செயல்களின் மூலம் அல்லாஹ்வின் அன்பை பெற முயற்சியுங்கள்.

இடைவெளி விரதம்
இடையிடையே விரதம் இருப்பது குழந்தை மற்றும் தாய் இருவரின் ஆரோக்கியத்தையுமே பாதிக்கும். குறிப்பாக அதிகளவு எடை குறைப்பிற்கு வழிவகுக்கும். இதனால் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பல நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஒருவேளை விரதம் இருந்தே ஆகவேண்டிய சூழ்நிலை இருந்தால் பின்வரும் குறிப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும்.

பழச்சாறு
விரதமிருக்க தொடங்குவதற்கு முன் முடிந்தளவு நீரோ அல்லது பழச்சாறோ குடித்து விடுங்கள். இது நாள்முழுவதும் உங்கள் உடலில் நீரின் அளவை குறையாமல் இருக்க உதவும். மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

சிக்கன்
நாள்முழுவதும் சாப்பிடாமல் இருக்க போகிறோம் என்பதற்காக வேனும் வயிற்றில் சிக்கன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணுவது உங்கள் குழந்தைக்கு ஏற்றதல்ல. அதற்கு பதிலாக சத்துக்கள் நிறைந்த இரண்டு அல்லது மூன்று பழங்களை உண்ணவும். இதிலுள்ள இயற்கை சர்க்கரை உங்கள் உடலின் ஆற்றலை சேமிக்கும். பால் மற்றும் தேங்காய் தண்ணீர் அதிகளவு ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியது.

உடற்பயிற்சி
விரதமிருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்கவும். நடைப்பயிற்சி போன்ற எளிமையான உடற்பயிற்சிகளை கூட செய்ய வேண்டாம். ஏனெனில் இவை உங்களை களைப்படைய செய்வதோடு உங்கள் உடலில் நீரின் அளவை குறைக்கும். முடிந்தவரை விரதமிருக்கும் நாட்களில் வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது.

அறிகுறிகள்
கர்ப்பகாலத்தில் விரதம் இருக்கும்போது உங்கள் உடலுக்குள் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது உடனடியாக மயக்கம், கால் வீக்கம் போன்ற அறிகுறிகளின் மூலம் உங்களுக்கு தெரிய வந்துவிடும். இதுபோன்ற சூழ்நிலையில் உடனடியாக விரதத்தை முடித்து விடவும்.

மனஅழுத்தம்
விரதத்திற்கு முன் அதிக சர்க்கரை உள்ள உணவுகள், காபி, டீ போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும். குறிப்பாக உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யுங்கள். ஆரோக்கியமும் கிடைக்கும், கடவுளின் அருளும் கிடைக்கும்.

மருத்துவ ஆலோசனை
விரதத்தை தொடங்குவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிகச்சிறந்தது. விரதம் இருக்கும்போது அடிக்கடி இரத்த அழுத்தத்தை சோதித்து பார்த்து கொள்வது நல்லது. மேலும் விரதத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே உங்கள் உணவுமுறையில் விரதம் இருக்க போவதற்கு ஏற்றாற்போல மாற்றத்தை செய்துகொள்ளுங்கள்.

தூக்கம்
கர்ப்பகால விரதத்தின்போது தூக்கம் மிகவும் அவசியம். சாதாரணமாகவே கர்ப்பிணி பெண்களுக்கு தூக்கம் அவசியமானது, இந்நிலையில் விரதமிருக்கும்போது தூக்கம் இன்றியமைத்ததாகிறது. இரவு சரியாக தூங்கவில்லையெனில் நாள் முழுவதும் சோர்வாக உணருவீர்கள், இந்த நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எச்சரிக்கைகள்
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். எடை குறைதல், சிறுநீரக செயல்பாடுகளில் மாற்றம், அஜீரணம், தலைவலி, குமட்டல், வாந்தி, அடிவயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விரதத்தை முடித்து கொள்ளவேண்டும்.

எவ்வாறு முடிக்க வேண்டும்?
விரதத்தை முடிக்கும் பொது இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டு முடிக்க வேண்டும். கார்போஹைடிரேட் அதிகமுள்ள தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்ணவேண்டாம். முட்டை, நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி போன்றவை தேவையான சத்துக்களை கொடுக்கும். காபி, டீ குடிப்பதற்கு பதிலாக பழச்சாறை குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications