Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
கர்ப்ப காலத்தில் தண்ணீர் நன்கு பருக வேண்டியதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம்!
பொதுவாகவே ஒரு நாளைக்கு இத்தனை அளவு நீரை பருக வேண்டும் என்ற கணக்கு ஆண், பெண், குழந்தைகள், சிறுவர் சிறுமியர், இளைஞர் இளைஞிகள் என அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது; அதாவது 3 லிட
பொதுவாகவே ஒரு நாளைக்கு இத்தனை அளவு நீரை பருக வேண்டும் என்ற கணக்கு ஆண், பெண், குழந்தைகள், சிறுவர் சிறுமியர், இளைஞர் இளைஞிகள் என அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது; அதாவது 3 லிட்டர் நீரை மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் பருக வேண்டும் என்று மருத்துவவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் கணக்கு கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் மாறுபடும்; ஏனெனில் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து அவர்கள் தண்ணீர் பருக வேண்டும்.

குழந்தைக்கும் சேர்த்து என்றவுடன் 6 லிட்டர் தண்ணீரை குடித்து விடாதீர்கள் கர்ப்பிணிகளே! உங்களுக்கு தேவையான அளவு, உங்கள் உடலுக்கு தேவையான அளவு நீரை மட்டும் பருக வேண்டும்; அதை விடுத்து அளவுக்கு அதிகமான தண்ணீரை அருந்தி விட்டாலும் பெரிய பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பதிப்பில் கர்ப்பிணிகள் அதிக அளவு நீரை பருகினால், அது கருவிற்கு நல்லதா கெட்டதா என்று படித்தறியலாம்.

தண்ணீரின் முக்கியத்துவம்!
தண்ணீர் தான் தாயின் உடலில் இருந்து, அவள் உண்ணும் உணவில் இருந்து தேவையான சத்துக்களை உறிஞ்சி குழந்தைக்கு கடத்த உதவுகிறது. மேலும் தாயின் வயிற்றில் குழந்தை வளர்வதே தண்ணீர் குடத்தில் தான் என்பதை நினைவில் கொள்ளவும். ஆகையால் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போதுமான அளவு நீரை கர்ப்பிணி பருக வேண்டும். தண்ணீர் கருவில் வளரும் குழந்தைக்கு செய்யும் நன்மை தீமைகள் குறித்து அடுத்தடுத்த பதிப்புகளில் விரிவாக காணலாம்.

உணவுப்பொருள்களை கடத்த..
தாய் உண்ணும் உணவில் இருக்கும் வைட்டமின்களை, நியூட்ரியன்களை, சத்துக்களை உறிஞ்ச தண்ணீர் அவசியம். உறிஞ்சிய சத்துக்களை கருவறையில் வளரும் குழந்தையிடம் சேர்த்து குழந்தையின் வளர்ச்சியை மேம்பட செய்வதும் தண்ணீர் தான். தண்ணீரின் இந்த செயல்பாடு மிகவும் முக்கியமானது, தண்ணீர் இருந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக வளர்ச்சி அடையும். தாயின் வயிற்றில் உறிஞ்சிய உணவு பொருட்களை, குழந்தையின் வயிற்றில் கொண்டு போய் சேர்க்கும் அற்புத செயலை ஆற்றுகிறது நீர்.

சிறுநீரக தொற்று!
தாயின் உடலில் எந்தவிதமான சிறுநீரக நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்கிறது; மேலும் தாயின் உடலில் எவ்வித சிறுநீரக தொற்றுகளும் ஏற்படாமல் இருக்க நன்கு, உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணிகளின் உடலில் உண்ணும் உணவால், மருந்துகளால் எந்தவித டாக்சின்கள் தோன்றி இருந்தாலும், கர்ப்பிணி பருகும் தண்ணீர் அவற்றை முழுவதுமாக அகற்றிவிடும். மேலும் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றுவது, சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவது அனைத்தும் உங்கள் உடலில் ஒரு சுத்திகரிப்பு வேலை தொடர்ந்து நடப்பதால் தான்.
நீங்கள் பருகும் தண்ணீர் உங்கள் சிறுநீரகத்தின் மீது மட்டுமே வேலை செய்யும், குழந்தையின் சிறுநீரகத்தின் மீது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், உங்கள் சிறுநீரகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டால், அது குழந்தையையும் தாக்கும் வாய்ப்பு உண்டு. எனவே போதுமான அளவு தண்ணீரை மறவாமல் பருகிடுங்கள்!

பலவீனம்
கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி ஏற்படும் உடல் பலவீனங்களான மயக்கம், தலைசுற்றல் போன்ற குறைபாடுகள் அனைத்தும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதால் குறையும், உடனடியாக மறைந்து விடும் என்ற கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் தண்ணீரை போதுமான அளவு பருகுவது கர்ப்பிணிகளில் காலை பலவீனம் எனும் மார்னிங் சிக்னெஸ் ஏற்படுவதை சுத்தமாக போக்கிவிடும். போதிய அளவு தண்ணீரை பருகுவது கர்ப்பிணிகளின் உடல் நிலையை சீரக வைக்கவும், கர்ப்பிணிகளின் உடல் வெப்பத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.

குறைப்பிரசவம்!
தண்ணீர் சரியாக பருகவில்லை எனில், கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தை பலவீனமாக பிறக்கலாம்; அல்லது ஏதேனும் குறைபாட்டுடன் பிறக்கலாம். மேலும் கருவிற்கு போதிய சத்து கிடைக்கவில்லை எனில், சில சமயங்களில் குறைப்பிரவம் கூட நிகழும் வாய்ப்புண்டு; ஏனெனில் குழந்தை வயிற்றினுள் வளர போதிய சத்துக்களும், சரியான சூழலும் இல்லாத நிலையில் குழந்தைப்பிறப்பு துரிதப்பட வாய்ப்பு உண்டு. ஆகையால், கர்ப்பிணிகளே உங்கள் குழந்தையின் உயிரைக் காக்க தயவு செய்து சரியான அளவு நீர் பருகுங்கள்!

பனிக்குடம்
கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை பனிக்குடத்தில் வளர்கிறது; பனிக்குடம் என்பது நீரால் ஆன ஒரு அறை; அதனுள்ளும் நீர் மட்டுமே நிறைந்திருக்கும். அந்த நீரில் தான் உங்கள் குழந்தை உருவாகி, மிதந்து வளர்கிறது. குழந்தைக்கு சத்துக்கள் கிடைக்க துணை புரிவதும் நீர் தான். எனவே கருவறையில் வளரும் கருவிற்கு நீர் எத்துணை முக்கியம் என்று உணருங்கள்! நீங்கள் கர்ப்ப காலத்தில் தண்ணீர் நன்கு பருகுவது கருவிற்கு ஆபத்து அல்ல; அத்தியாவசியம் என்று உணர்ந்து செயல்படுங்கள்!



Click it and Unblock the Notifications