For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு அசைவில்லை என்றால் இப்படிச் செய்திடுங்கள்!

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தொடர்ந்து வயிற்றிலிருக்கும் குழந்தை அசைகிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.அது குறைந்தால் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருக்குமா என்று பயப்படுகிறார்கள்.

|

பல கனவுகளை சுமந்த படி தன்னுள்ளே ஓர் உயிரை சுமக்கும் தாய்மார்களுக்கு அந்த ஒன்பது மாதங்கள் மிகவும் உணர்வுப் பூர்வமானது. முதல் மாதம் முடிந்ததும் லேசாக வயிறு துடிப்பதை உணர முடியும்.

குழந்தை உருவானதும் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் தான். ஒன்றாம் மாதம் முடிவிலிருந்து குழந்தையின் இதயம் துடிப்பதை நன்றாக உணர முடியும். அதன் பின்னர் ஐந்தாம் மாதத்திலிருந்து முழு குழந்தை அசைவது, உதைப்பது போன்றவற்றை உணர்வார்கள்.

சிலருக்கு இந்த அறிகுறிகள் முன்ன பின்ன உணரலாம். சிலருக்கு இந்த உணர்வுகள் எதுவுமே இருக்காது. உள்ளே குழந்தை அசைவது,உதைப்பது போன்ற எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று சொல்லி கர்ப்பிணிகள் பயந்து கொண்டு இருப்பார்கள். ஒரு வேளை உள்ளே இருக்கும் குழந்தைக்கு எதாவது ஆகிவிட்டதா? அல்லது குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்பு உண்டாகியிருக்குமா என்றெல்லாம் வீணாக பயப்படாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏழாம் மாதம் :

ஏழாம் மாதம் :

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் அசைவுகள் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

ஏழாம் மாதம் வரையிலும் எந்த அசைவுகள் தெரியவில்லை என்றால் கூட நீங்கள்

பதட்டமடைய வேண்டாம்.

ஏழு மாதம் முழுமையடைந்த பிறகே குழந்தை உதைப்பது, அசைவது போன்ற சேட்டைகளில் ஈடுபடும். அரை மணி நேரம் அமைதியாகவும்

அரை மணி நேரம் விளையாடவும் செய்யும்.

அம்மா... :

அம்மா... :

குழந்தையை சுமக்கும் பெண்களின் அன்றாட பழக்கங்களில் கூட இதற்கு ஒரு காரணமாக அமைந்திடும். கர்பப்பையில் இருக்கிற அம்னியாடிக் நீரின் அளவு அதாவது தண்ணீர் குடம் நீர் அளவு பொருத்தும் இந்த அசைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

சிலருக்கு மிகவும் லைட்டாக உன்னிப்பாக கவனித்தால் மட்டும் தெரிந்திடும் சிலருக்கோ தங்கள் செய்து கொண்டிருக்கிற வேலை தொடர முடியாத வகையில் குழந்தையின் அசைவு அன்புத் தொந்தரவைக் கொடுக்கும்.

38 வாரங்கள் :

38 வாரங்கள் :

குழந்தை வளர வளர கிட்டதட்ட எட்டாம் மாதம் நெருங்கும் மாதத்திலிருந்து குழந்தையின்அசைவு படிப்படியாக குறைந்திடும். குழந்தை மெல்லச் சுற்றி வெளியே வருவதற்கு ஏதுவாக அசைந்திடும்.

இதனாலும் மாதம் அதிகரிக்கும் போது குழந்தையின் அசைவு மெல்லக் குறையும்.

குழந்தையின் வளர்ச்சி :

குழந்தையின் வளர்ச்சி :

இந்த அசைவுகள் எல்லாமே குழந்தையின் வளர்ச்சியுடன் தான் எப்போதும் ஒப்பிடப்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான தாய்மார்கள் குழந்தையின் அசைவு தெரியவில்லை என்று சொன்னால் குழந்தை வளர்ச்சியில்லையோ என்று பயப்படுகிறார்கள். முதலில் இப்படியான தப்பான அபிப்ராயங்கள் கேட்பதை தவிர்த்து தேவையின்றி பயப்படாதீர்கள்.

தாயின் ஆரோக்கியம் :

தாயின் ஆரோக்கியம் :

இந்த நேரத்தில் தாய்மார்களின் உடலில் ஏகப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அதோடு உள்ளே ஓர் உயிர் இருக்கிறது என்ற உணர்வே உங்களுக்கு பதட்டத்தை உண்டாக்கிடும்.

சில நேரங்களில் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டு சோர்வாக இருக்கும் போது கூட உங்களால் குழந்தையின் அசைவுகளை உணர முடியாது.

உங்கள் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக பராமரித்திடுங்கள்.

குழந்தையின் அமைப்பு :

குழந்தையின் அமைப்பு :

சிலர் உள்ளே குழந்தை இருக்கும் நிலை பொருத்தே அசைவுகள் இருக்கும் ஒரு வேளை தவறான பொசிசனில் இருந்தால் குழந்தையால் அசைய முடியாது என்று சொல்கிறார்கள்.

இதுவும் தவறான கருத்து. குழந்தை எந்த பொசிசனில் இருந்தாலும் அவை சுற்றி நார்மல்பொசிசனுக்கு வந்திடும் .

கடைசி மாதம் நெருங்கும் வேலைகளில் தான் குழந்தையால் எளிதாக வளம் வர முடியாது.

விளையாட்டு :

விளையாட்டு :

அமைதியாக நீங்கள் நிதானமாக இருக்கும் போது வயிற்றுக்கு லேசாக மசாஜ் கொடுத்திடுங்கள். சிலருக்கு வயிற்றில் அதிகமாக அரிக்கும்.

குழந்தைக்கு அதிக முடியிருந்தால் இப்படி அரிக்கும் என்பார்கள். இந்த சூழ்நிலையில் உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிற சூட்டில் தண்ணீர் ஒத்தடம் கொடுங்கள்.

இது அரிப்பை கட்டுப்படுத்துவதுடன். குழந்தைக்கும் கதகதப்பான உணர்வை அதிகரிக்கச் செய்திடும்.

அபார்ஷன் :

அபார்ஷன் :

குழந்தையின் அசைவுகளை வைத்தே அபார்ஷன் நிகழப்போவதை உங்களால் பெரும்பாலும் யூகிக்க முடியும். வழக்கத்திற்கு மாறாக குழந்தையின் அசைவுகள் இருந்தாலோ அல்லது தாய்மார்களுக்கு அடிவயிற்றில் தாங்க முடியாத வலி இருந்தோலோ நீங்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

2 மணி நேரங்களுக்கு 10 :

2 மணி நேரங்களுக்கு 10 :

குழந்தையின் அசைவு இது வழக்கமானது, இது வழக்கத்திற்கு மாறானது என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் குழந்தையின் அசைவுகளை தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் .

குழந்தை 32 முதல் 35 வாரங்களில் தான் அதிகப்படியான அசைவிருக்கும்,அப்போது இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறையென உங்களுக்கு அசைவுகள் தெரியும். பத்து அசைவுகள் வரை தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what to do when fetal movement is reduced

what to do when fetal movement is reduced
Story first published: Friday, December 22, 2017, 17:50 [IST]
Desktop Bottom Promotion