தனது கர்ப்பம் கலைந்தாலும் பரவாயில்லை என்று தன்னை நம்பி வந்த பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நமது உயிரை காப்பதால் மருத்துவரை தெய்வமாக மதிக்கிறோம். மருத்துவர்கள் அந்த தெய்வத்திற்கும் மேல் என நினைக்க வைத்திருக்கிறார் எகிப்து நாட்டை சேர்ந்த பெண் மகப்பேறு மருத்துவர் மேர்வாட் முகமது. அப்படி அவர் என்ன தான் செய்தார் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பம் கலைந்தது

கர்ப்பம் கலைந்தது

மேர்வாட் முகமது என்பவர் எகிப்து நாட்டில் உள்ள ஒரு பெண் மகப்பேறு மருத்துவர். இவர் கர்ப்பமாகவும் உள்ளார். இவர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது தீடீரென இவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பம் கலைந்து விட்டது.

உயிரை பொருட்படுத்தாத மருத்துவர்

உயிரை பொருட்படுத்தாத மருத்துவர்

இருப்பினும் இவர் தனது உயிரை பொருட்படுத்தாமல், அந்த பெண்ணின் பிரசவம் நல்லபடியாக முடியும் வரை உடன் இருந்துள்ளார். இவர் பிறந்த அந்த பச்சிளங்குழந்தையின் அரும்பு முகத்தை காணும் வரை பிரசவ அறையை விட்டு வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளுக்கு மேல்!

கடவுளுக்கு மேல்!

பின்னர் மேர்வாட் முகமது தனி அறையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த மருத்துவரின் கடமை உணர்வை என்னவென்று சொல்லி பாராட்டுவது? இவர் கடவுளுக்கு மேல் என்று சொல்வதை விட வேறு ஒரு வார்த்தை கிடைக்கவில்லை.

வலியும் வேதனையும்!

வலியும் வேதனையும்!

வலிகளிலேயே மிகப்பெரிய வலி பிரசவ வலி தான். ஒரு பெண் தன்னால் பொருத்துக்கொள்ளக்கூடிய அளவைக்காட்டிலும் பிரசவத்தில் அதிக வலியை அனுபவிக்கிறாள். இதே போன்றது தான் கர்ப்பம் கலைந்த வலியும், பிரசவ வலியில் குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் கலந்திருக்கிறது. ஆனால் கர்ப்பம் கலைந்த வலியில் மன வேதனை தான் அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnant Doctor Suffers a Miscarriage During Delivering a Patient Baby

Pregnant Doctor Suffers a Miscarriage During Delivering a Patient Baby