கர்ப்பிணி பெண்கள் நவராத்திரி விரதம் இருக்கலாமா?

Written By:
Subscribe to Boldsky

நவராத்திரி சிறிது நாட்களில் வரப்போகிறது. இந்த நாட்களில் பெண்கள் விரதம் இருந்து கடவுளை வழிபடுவார்கள். கர்ப்பிணி பெண்கள் விரதம் இருக்கலாமா என்பது விவாதத்திற்கு உரியது. பல மருத்துவ வல்லுநர்கள் கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பது கூடாது என்கிறார்கள்.

பெண்களின் கர்ப்பத்தின் முதல் பருவகாலம் மற்றும் முன்றாவது பருவகாலத்தில் நிச்சயமாக விரதம் இருக்க கூடாது. உங்களுக்கு விரதம் இருந்தே ஆக வேண்டும் என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவராத்திரி விரதம் :

நவராத்திரி விரதம் :

நவராத்திரி விரதம் அவ்வளவு கடுமையானது அல்லது. இந்த விரத காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடலாம். நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் கர்ப்பகாலத்தில் இருப்பது தவறானது. நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து தான் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் செல்கின்றன. எனவே கர்ப்பகாலத்தில் விரதம் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.

நீங்கள் கட்டாயம் கர்ப்ப காலத்தில் விரதம் இருந்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால், இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

நீங்கள் விரத காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது உங்களையும், கருவில் உள்ள உங்கள் குழந்தையையும் பாதிக்கும். தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் வறட்சி ஏற்படும்.

மருத்துவரின் ஆலோசனை

மருத்துவரின் ஆலோசனை

மருத்துவரின் ஆலோசனை இன்றி கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டாம். சிலருக்கு பிரசவ காலம் எளிதானதாக இருக்கும். ஆனால் சிலருக்கு சற்று கடினமானதாக இருக்கும். கர்ப்பகாலத்தில் விரதம் இருப்பது கடினமானதாக இருந்தாலும், மருத்துவர் சரி என்று கூறினால் மட்டும் விரதம் இருக்கலாம்.

பசியில் இருந்து தப்பிக்க..

பசியில் இருந்து தப்பிக்க..

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சத்தான பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியம். மிக நீண்ட நேரம் பசியுடன் இருப்பது வலிமையை குறைக்கும், இரத்தசோகை, அசிடிட்டி, தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். இது கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான உணவுகள்

ஆரோக்கியமான உணவுகள்

நவராத்திரி சமயத்தில் அதிகமாக எண்ணெய்யில் செய்த பலகாரங்கள் மற்றும் அதிகமாக பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது. ஆரோக்கியமான உணவுகளான, பால், பழங்கள் மற்றும் டிரை புரூட்ஸ், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இதன் மூலம் அசிடிட்டி வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

உப்பு இல்லாத விரதம்

உப்பு இல்லாத விரதம்

சிலர் உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளாமல் விரதம் இருப்பார்கள். கர்ப்பிணி பெண்கள் நிச்சயமாக இதனை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. எனவே உப்பு இல்லாத விரதத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கலாம்.

குறிப்பு :

குறிப்பு :

விழாக்காலங்களை கொண்டாட நினைத்து, இது போன்ற விரதங்களை இருப்பது ஒருவேளை உங்களது உடல்நலனையும், குழந்தையும் உடல்நலனையும் பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

navratri fasting during pregnancy tips

navratri fasting during pregnancy tips
Story first published: Thursday, September 14, 2017, 11:50 [IST]
Subscribe Newsletter